உன் ஞாபகத்தின் ஸ்பரிசம்

By சரவணன்

ஆங்காங்கே பழமையாகி
போன சில துருப்பிடித்த
உன் ஞாபகத் துண்டுகள்
இன்னும் என் இதயத்தின்
இடுக்குகளிலெல்லாம்
சிதறிக்  கிடந்து
உன் காதலை என்னிடம்
சொல்லிக் கொண்டே இருக்கிறது..!!
உன் நினைவுகளை விட்டு
எவ்வளவு தூரம் ஓட முடியுமோ
அவ்வளவு தூரம் ஓடுகிறேன்..
எங்கு ஓடி எங்கு ஒழிந்து
என்ன பயன்.... !!
உடலோடு ஒட்டிக் கொண்ட.
நிழலைப் போல்
உள்ளத்தோடு ஒட்டிக் கொண்ட
உன் நினைவுகளை விட்டு
நான்தான் எவ்வளவு தூரம்
ஓடுவது சொல்...
என்னிலிருந்து உன்னைப் பிரித்தறிய
இன்னும் எனக்கு தெரியவில்லை
உன் ஞாபகத்தின் ஸ்பரிசம்
இன்னும் என் தலை
கோதிக் கொண்டே இருக்கிறது..
காற்றின் மொழி

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE