புணர்தலின் முதல் விதி

By செய்திப்பிரிவு

வியர்வை இனிக்க
நெற்றியில் முத்தம் பதி...
பூக்களின் கோபம்
கை விரல் தட்டு...
கட்டிப்பிடி கைரேகை இறுக்கு...
என்ன வேதனை
மறந்து போ..
மாராப்பை சரி செய்
காதல் சரிந்து வீழ கெட்டுப்போ...
கொட்டும் மழை போல்
முத்தம் வை..
அடைமழை ஆகட்டும்...
ஆகட்டும் கடித்து வை
காமம் மருத்துவம் தேடட்டும்
கதகதப்பை....
படையில் முதல் துவக்கத்தில்
விரல்கள் முன் நீட்டு..
எதிரிகள் அல்ல...நீ
வீழ்ந்து தவழ்ந்து முன்பின்
கைகள் வெல்லட்டும்
எட்டிப்பிடி....
சூடாய் ஒரு மையல்
வேண்டாம் ஆறப்போடு....
காதைத் திருப்பு...
ஆறா இரணம் தான்
காமம் சில நொடி
கண்களை மூடிக்கொள்
பட்டினி கிடக்கட்டும்  காத்திருப்பு....
உதவிக்கு எதையும் பேசாதே
மௌனப்பார்வை தழுவு...
பாத்துப்பார்த்து செத்துப்போ..
காதலை புதைக்க குழி தோண்டிவிட்டு
படுக்கத் தொடங்கு....
காதில் பெயர்களை கிசுகிசு
அது காம வேதம் ஆகட்டும்..
கட்டில் நழுவி தரையில் விழு..
செத்த பின்னும்
மறக்காதபடி முத்தமிடு...
முடிந்தவரை முட்டி மோது...
பச்சையாய் சொல்கிறேன்
காதலித்து காமம் கொள்..
இல்லையேல்...
செத்துப் போ...போதும்.

.. இயலிசம்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE