நீ...போ.. என்று ஏகவசனத்தில், பெரியவாளுடன் உரையாடின குடியானவர்கள் - பெரியவா

By செய்திப்பிரிவு

திகைத்தும் ஆத்திரப்பட்டும் போன தொண்டர்கள்.

"இந்த இரண்டு குடியானவர்களுக்கும் என்னிடம் ரொம்ப பக்தி. சாப்பிடலையேன்னு ரொம்ப கவலை! அதனால், "போய் சாப்பிடு"ன்னு பாசத்தோடு உத்தரவு போட்டுட்டுப் போறா. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமோ?"-பெரியவா.

ஸ்ரீமடம் எசையனூரில் முகாமிட்டிருந்தது.வந்திருந்த எல்லா பக்தர்களுக்கும் காலையிலிருந்தே தரிசனம் கொடுத்துக் கொண்டும், சில பேர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்கள்,பெரியவா

பிற்பகல் மணி இரண்டு ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் - காலையில் உட்கார்ந்த இடத்திலிருந்து ஓர் அடி கூட நகர்ந்து விடாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள்.


அப்போது அந்தக் கிராமத்து மக்கள் இரண்டு பேர் வந்தார்கள். சிப்பாய், வெங்கடேசன் என்று பெயர். தினமும் தரிசனத்துக்கு வந்து பெரியவாளுக்கு அறிமுகமானவர்கள்

இருவரும் நேரே பெரியவாளிடம் போனார்கள்.

"இதப்பாரு..இப்ப மணி என்ன தெரியுமா? பன்னண்டுக்கு மேலே ஆச்சு. பொழுது விடிஞ்சதிலேர்ந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம உட்கார்ந்திருக்கியே? ஏன் பட்டினி கிடக்கே? போய் சாப்பிடு" என்றார்கள்.

மெய்ப்பணியாளர்கள் திகைத்துப் போய் நின்று விட்டார்கள். அப்புறம் ஆத்திரப்பட்டார்கள். எவருடைய முன்னிலையில், கோடீசுவரர்களும் அரசு அதிகாரிகளும் தலைகுனிந்து வணங்கி நிற்கிறார்களோ அந்த மகாப் பெரியவாளை, அ னா, ஆ வன்னா தெரியாத இரண்டு நாட்டுக்கட்டைகள், 'நீ,போ' என்று ஏகவசனத்தில் பேசுகிறார்கள்! கடவுளே!.

பெரியவா மெல்லச் சிரித்துக் கொண்டு தொண்டர்களிடம் சொன்னார்கள்;

"நான் சந்யாஸம் வாங்கிக்கொள்ளும் முன்பு, அப்பா,அம்மா,வயதான பெரியவர்கள் தான் என்னை வா,போ என்பார்கள். இந்த இரண்டு குடியானவர்களுக்கும் என்னிடம் ரொம்ப பக்தி. சாப்பிடலையேன்னு ரொம்ப கவலை! அதனால், 'போய் சாப்பிடு'ன்னு பாசத்தோடு உத்தரவு போட்டுட்டுப் போறா. எவ்வளவு சந்தோஷமா இருக்கு, தெரியுமோ?"

உடனே அந்த இடத்திலிருந்து எழுந்து விட்டார்கள். தொடர்ந்து நீராடல்,நித்யகர்மா இத்யாதி. பிட்சைக்குத் தயாரானபோது பிற்பகல் மணி.

தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE