ஆம்பளைங்க வீட்ல கிரிக்கெட் பார்க்க முடியாது ஏன்?

By செய்திப்பிரிவு

கீழே ஓரு வீட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க.... இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே....

Wife: இது யாரு Bret Lee-ஆ?

Husband: இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர்.

Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான்.  அவங்க அண்ணன் மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்.....

Husband:   அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி...

Wife: அப்போ Bruce Lee யாரு?..

Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு...

Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ.

Husband: அடியே... இது ஆக்‌ஷன் ரீப்ளேடி... கடவுளே.....

Wife:  போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே....

Husband:  இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா

Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு...

Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி....

Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?....

Husband: ????

Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?...

Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்....

Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா...

Husband:

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE