இது உண்மையான காதல் கதை!

By செய்திப்பிரிவு

அது எல்லாம் பல காதல் கதைகள் எனக்குள்ள கொட்டி கெடக்குதுங்கோ. நான் தான் அதை எஸ்டாப்ளீஸ் (Establish) செய்ய விரும்புவதில்லை.. அதனால் நடிகர் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்த அமரன் திரைப்பட பாணியில் நடந்த ஒரு உண்மை காதல் கதையை இங்கு எழுதுகிறேன்.

முன் குறிப்பு:
நிஜத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் இக்கதை, புனைவு என்னும் வண்ணங்கள் பூசப்பட்டு உங்கள் முன் விரிந்து நிற்கிறது. அந்த வண்ணங்கள் கதையின் ஆணிவேரையோ, மாந்தர்களின் குணநலன்களையோ மாற்றாமல் அதன் அழகைக் கூட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெரிவித்து கொள்கிறேன். எதையும் விரிவாகவே எழுதி பழக்கப்பட்ட நான் இந்த கதையை என்னால் முடிந்த அளவு சுருக்கமாக குட்டி கதையாக எழுத முயன்றிருக்கிறேன்.

என்று இந்த கதையின் நாயகனும் நாயகியும் உயிருக்கு உயிராய் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்.

நாயகனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிரித்த முகம், பேச்சில் எளிமை , கண்களில் ஓர் தீர்க்கமான ஒளியுடன் தான் நினைத்ததை செய்து முடிக்கும் ஒரு தன்னம்பிக்கை....இவருக்கு ராணுவ வீரராக ஆக வேண்டும் என்பது வெறும் கனவு மட்டும் அல்ல அவன் தூக்கத்தை தொலைத்த தேடல்.

நாயகியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவளுக்கு என்று பெரிய கனவு ஏதும் இல்லை. அவள் கனவும் நினைவும் எப்பொழுதும் நாயகனை பற்றியே இருந்தது.

நாயகனும், நாயகியும் சண்டிகரில் உள்ள பஞ்சாப் யுனிவர்சிட்டி - இல் MA படிக்கும் பொழுது ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். சந்திப்பு புரிதல் ஆகி, புரிதல் காதலானது.

நாயகனின் படிப்பு முடிந்ததும் இந்திய ராணுவத்தில் பனிபுரியும் அவருடைய கனவு நனவானது. தன் தலைவியையும் தன் தாய் நாட்டையும் தன் இதயத்தில் "லப் டப்" ஒலியாக சுமந்து நின்ற நாயகனுக்கு காதலியை பிரியும் நிலை ஏற்பட நாயகியும் காதலன் பிரிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்கிறாள்.

அப்பொழுது எல்லாம் செல்போன் கிடையாது, பொது இடத்தில் சுலபமாக பார்த்துக்கொள்ளும் ரொமான்ஸ் கிடையாது. இதை எல்லாம் கடந்து அவர்களது காதல் இரண்டு மனிதர்களுக்குள் மெளனமா உருவான நம்பிக்கை மட்டுமே. நாயகன் எப்பொழுதெல்லாம் வீட்டிற்கு வருகிறானோ அப்பொழுதெல்லாம் மறைமுகமாக தன் ரகசிய காதிலியை சந்திப்பது வழக்கம்.

நாயகன் போகும்போதெல்லாம் அவனிடம் அழுகையுடன் அவள் கேட்பாள் " மறுபடியும் எப்பொழுது வருவாய்" என்று அதற்கு அவன் சிரிச்சுக்கிட்டே.

“I’ll come back.”

அவ்வளவுதான். அதுக்குப் பிறகு நாயகியிடம் இருந்து மறுவார்த்தை கிடையாது. ராணுவ வாழ்க்கை இப்படிதான் இருக்கும் போல என்று தனக்கு தானே மனசுக்குள் பேசி தன்னை தேற்றிக்கொள்வாள்.

இவ்வாறு சில மாதங்களுக்கு ஒரு முறை நாயகன் நாயகியை பார்த்து இருவரின் பிரிவுக்கும் அவ்வப்பொழுது விலக்கு அளித்து மகிழ்ந்தாளும் ; அந்த மகிழ்ச்சி ஓர் இரு நாட்கள் மட்டுமே நீடித்தது.

இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர ; இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. நிச்சயம் முடிந்ததும் அவர்கள் சந்திப்பு மேலும் இனிமையானது. தாய் நாட்டுக்கான கடமையை செய்ய செல்லும் போதெல்லாம் நாயகியிடம் சிரித்துக் கொண்டே "I will come back" என்ற வார்த்தை மட்டுமே உதிர்த்து விட்டு செல்வார்.

அவளும் அந்த வார்த்தையையே வேத வாக்காக என்னி அவன் வரும் நாட்களுக்காக விழி மேல் விழிவைத்து வழி பார்த்து காத்திருப்பாள்.

அப்பொழுது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் தீவிரமானது. நிச்சயம் முடிந்த கையோடு அந்த போரில் தன்னை முழுமையாக ஈடபடுத்தி கொண்டான் நாயகன்.

போர் காரணமாக நாடு முழுக்க சத்தம், போர் செய்திகள், வீரர்களின் தியாகம் பெரும் பேசுபொருளாகியது.

இதை அறிந்த நாயகி நாயகனுக்கு ஏதும் ஆககூடாது என்ற பிரார்த்தனையிலே தன் நாள் முழுக்க கண்ணீரிலே கடத்துகிறாள்.

தான் இருக்கும் படையில் கேப்டனாக பொறுப்பேற்று எதிரிகளின் முன்னாள் ஒரு மாவீரனாக நின்றான் நாயகன். எதிரிகளின் தோட்டா சத்தங்களுக்கு பின்வாங்காமல் தன் படையை முன்னோக்கி அழைத்து சென்று "இந்த கார்கில் மலை பாரத மாதவுக்கு சொந்தமானது; எங்க கொடி பறக்க வேண்டிய இடத்தில் வேறு எவன் கொடி டா பறக்கும் " என்று சிங்கம் போல் கர்ஜித்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து முன்னேறி சென்று கொண்டு இருக்கும் போது எதிர் பாராத விதமாக எதிரி நாட்டு வீரரின் துப்பாக்கி குண்டு நாயகனின் இதயத்தை துளைத்தது.. குண்டு துளைத்தது அவன் இதயத்தை மட்டும் அல்ல அவன் காதலியின் இதயத்தையும் சேர்த்து தான். நாட்டிற்காக வீர மரணம் அடைந்ததோடு தன் காதலையும் நாட்டிற்காக தியாகம் செய்தார் அந்த மாவீரன்.

நாடு சொன்னது "ஒரு வீரன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார் " என்று.
ஆனால் நாயகி இழந்தது போர் வீரனை அல்ல அவன் ஆருயிர் காதலனை. நிச்சயம் முடிந்த கையோடு மணவறையில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றவன் இன்று இந்திய கொடி போர்த்திய தியாகியாக பிணவறையில் பார்த்த போது அவள் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.

சிரிச்சு சிரிச்சு பேசியவன் ; அவளை விட்டு பிரியும் நேரத்தில் கவலைப்படாதே "I will Come back " என்று நம்பிக்கை கொடுத்த தன் காதலனின் இறப்பை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாத நாயகி காதலன் நினைவிலே ஒவ்வொரு நாளையும் கடத்துகிறாள். அதுவும் விதவைகோலத்தில். அவளது திருமண வாழ்க்கை வெறும் நிச்சயதார்தத்துடன் முடிந்தாலும் அவளது காதல் வாழ்க்கை இன்றைக்கும் உயிருடன் தொடர்கிறது.

அவன் திரும்பி வரவில்லை, ஆனால் ‘I’ll come back’ என்று அவன் சொன்ன வார்த்தையானது அவளது இதயத்தின் அறையில் காற்றோடு கலந்து, வாழ்க்கை முழுக்க உயிரோடு துடித்து கொண்டிருக்கும் - எப்பொழுதும் நிக்காமல்.

நாயகன் தேசத்துக்காக தன் காதலையே தியாகம் செய்தாலும்; நாயகி தன் காதலனுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்து இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் அவன் நினைவிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

இன்றைக்கு காதல் திருமணம் செய்பவர்களே மனம் கசந்து விவாகரத்து செய்து கொண்டு மறு திருமணம் செய்து கொள்ளுகின்றனர். இது போன்று விவாகரத்து செய்து கொண்ட காதல் தம்பதியினருக்கும் இனி விவாகரத்து செய்ய இருக்கும் காதல் தம்பதியினருக்கும் இந்த புனிதமான காதல் கதையை சமர்பணம் செய்கிறேன்.

சில உண்ணதமான காதல்கள் முடிவை எட்டாது... அந்த மாதிரி காதலை நம்மால் மறக்கவும் முடியாது. அது போன்ற காதல் கதை தான் இது.

பின் குறிப்பு:
இந்த உண்மை கதையில்
நாயகனின் பெயர் : கேப்டன் விக்ரம் பாத்ரா (பாலம்பூர் - ஹிமாச்சல் பிரதேஷ்)
நாயகியின் பெயர் : டிம்பிள் சீமா (சண்டிகர்)
கார்கில் போர் நடந்த ஆண்டு:1999 (மே-ஜூலை)
இவர்கள் இருவரும் 1995 - இல் ஒரே வகுப்பில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் யுனிவர்சிட்டியில் MA - English படித்தார்கள்.

இராணுவத்தில் சேர்ந்த 1.5 வருடத்திற்குள் விக்ரம் பாத்ரா வீரமரணம் அடைந்தார் (அப்போது அவருடைய வயது 24)

வீரமரணத்திற்கு பின்பு கேப்டன் விக்ரம் பாத்ராவுக்கு இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான "பரம் வீர் சக்ரா" வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE