குரு பகவானை வழிபட்டால் என்ன பலன்கள்?

By News Room

நவகிரகங்களில் சுப கிரகமானவர் குரு பகவான். குரு பார்க்க கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது பெரியோர்களின் வாக்கு.

வளர்ச்சி, திருமணம், அறிவிற்கு குருவே அதிபதி. குரு பார்த்தால் அசுப கிரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மை பயக்கும். இப்படி பல சிறப்புக்கள் நிறைந்த குரு பகவானை வழிபடுவதற்கு சில முறைகள் இருக்கின்றன.

அதன்படி அவரை சரியாக வழிபடுவோருக்கு பல நன்மைகள் நிச்சயம் வந்து சேரும்.

ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஞானத்தை குறையாது வழங்கி அருள்பவர் தெட்சிணா மூர்த்தி.

இவருக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

குரு பகவானுக்கு ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கை 11 அல்லது 21 ஆகா இருப்பது சிறந்தது.

தட்சிணாமூர்த்திக்கு பிடித்த மலர்கள் முல்லை, மல்லிகை. ஆகையால் அவருக்கு முல்லை அல்லது மல்லிகை மாலையை அணிவித்து கொண்டைக்கலையை படை த்தது வழிபடுவது சிறந்தது.

தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும்.

குரு காயத்திரி மந்திரம்.

ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே க்ருணி அஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும்  36 முறை கூறி வந்தால் வாழ்வில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகி நன்மை வந்து சேரும்..

.
மேலும்