சந்திரன் எதைக் கொடுப்பார்? எதையெல்லாம் கெடுப்பார்?

By News Room

மனோகாரகன், உ ணவு நீர் நிலைகள்,  ஞாபக சக்தி, தன்னிறைவு,

மனதை ஆட்கொள்ளும் மாயாவி,

நீரின் ஆற்றல் அளப்பரியது, நீர்நிலைகளில் அமர்ந்து தியானம் செய்து ஆத்ம சக்தியை நீர்நிலைகளில் விடும்பொழுது, நீரின் சக்தி அதிகரிக்கும் என சொல்வதுண்டு.

இதனால்தான் ரிஷிகளும் யோகிகளும் முனிகளும் நீர்நிலைகளில் அமர்ந்து தியானம் செய்கிறார்கள், ,

உலகம் முழுமையும் நீரால் சூழப்பட்டது, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம் அந்த நீருக்கு அதிபதி சந்திரன், ,

உணவு, கற்பனைத்திறன், காதல் ரசனை, இரக்க குணம், தயாளகுணம் தருமி கர்மி என அனைத்திற்கும் காரகம் வகிப்பவர் சந்திரன் ..

எந்த நிலையிலும் சந்திரன் மட்டுமே, அனைத்து செயல்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார், ,மனதை ஒருநிலைப்படுத்தும் பொழுது அனைத்து விஷயங்களும் மாற்றியமைக்கப்படும், ,

எந்த லக்னம் எந்த ராசி எந்த தசா நடந்தாலும் மறைமுகமாக மனதை ஆட்கொள் பவர் சந்திரனே..

எதையெல்லாம் கெடுப்பார் ..

சந்திரன் ராகு கேதுவுடன் தொடர்பு ஏற்படும் பொழுது, (சுய ஜாதகம் மற்றும் கோட்சாரம் என அனைத்து நிலைகளிலும்) ராகு அல்லது கேதுவுடன் கிரகண படும் பொழுதும், தன்னுடைய சுய தன்மையை இழந்து, மனத்தடுமாற்றம் ஏற்படும் என்றால் மிகையல்ல ..

சந்திரன் பாவ கிரக தொடர்பு ஏற்பட்டாலோ அல்லது தேய்பிறை சந்திரனாக இருந்து ஜாதகத்தில் சந்திரன் கெடும் நிலையில், மனம் கெடுக்கிறது,#kirthika##

மாறுபாடான சிந்தனைகள் இயல்புக்கு மாறான செயல்கள் என அனைத்தையும் தருபவர் சந்திரன்

தற்கொலை எண்ணங்கள், அடுத்தவருக்கு தீங்கு நினைக்கும் எண்ணங்கள், பழிவாங்குவது, சூழ்ச்சி நயவஞ்சகம் என அனைத்திற்கும், காரகம் சந்திரன்  கெடும் நிலையில் மனம் கெட்டு எண்ணங்கள் கெடுகிறது.

#kirthika##

எந்த கிரகம் கெட்டாலும் சந்திரன் மட்டும் ஒரு ஜாதகத்தில் கெடாமல் இருக்கும் பொழுது, ஒளி பொருந்திய நிலையில், (ஒரு வீட்டில் தகப்பன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாய் நன்றாக இருந்தால் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் கரை சேர்த்துவிடும் முடியும் என்பதை போல) சந்திரன் மட்டும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பொழுது மட்டுமே எண்ணங்களும் செயல்களும் சரியாக அமையும் ..

சந்திரன் ராகு கேது தொடர்பு அல்லது சனி செவ்வாய் நடுவில் பாபகர்த்தாரி யோகத்தில் சந்திரன் அமைந்தாலும் இதனை வலுவான குரு பார்க்கும் நிலையில், முதலில் செய்த செயல்களுக்கு மனம் வருந்தி அதன் மூலம் மன மாற்றத்தையும் உருவாக்குவார் (But damage is the damage only)

மன அமைதிக்கு,சந்திரனை வலுப்படுத்த, சந்திர வழிபாடு சிவ வழிபாடு மற்றும் பால் தயிர் போன்ற உணவுகள் தானமாக தருதல் நன்மை தரும்.

.
மேலும்