இன்றைய ராசி பலன்கள் - (14-11-2025 வெள்ளி கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
ஜாமீன் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷபம்
வெளிநபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். மனம் தெளிவு பெரும். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுனம்
வீட்டில் புது பொருள் சேர்க்கை ஏற்படும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

கடகம்
மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். நட்பால் நல்லது நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு

சிம்மம்
யோசிக்காமல் எதையும் செய்ய வேண்டாம். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்
தனது பலம்  பலவீனத்தை நன்கு உணர முடியும். புது திட்டங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்
யாருக்கும் யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம். உடல் சோர்வு நீங்கும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு
விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகரம்
உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். மன பயம் நீங்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

கும்பம்
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் ஏற்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீனம்
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE