இன்றைய ராசி பலன்கள் - (01-11-2025 சனிக்கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வேலைகளை தாமதமின்றி முடிக்க முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

ரிஷபம்
குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக பயணங்கள் செல்ல முடியும்.வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். வேண்டியவர்களுடன் சின்ன சின்ன நெருடல்கள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுனம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு சிறப்பைத்தரும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

கடகம்
 தியானம், யோக மன அமைதிக்கு வழிவகுக்கும். சவால்களை, விவாதங்களை சந்திக்க வேண்டிவரும். கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து போகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

சிம்மம்
குடும்ப வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் நீங்கும். வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள்.நண்பர்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பர். கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம்
சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை செயல்படுத்த முடியும். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிகம்.
மறைமுக விமர்சனமும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். முக்கிய காரியங்களை தாமதமின்றி முடிக்க முடியும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்

தனுசு
புது நபர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். சுப விரைய செலவுகள் உண்டாகும்.மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மகரம்
மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கும்பம்
குடும்ப பணிகளை தனி ஆளாக பார்க்க வேண்டி வரும். நட்பு வழியில் சில தொந்தரவுகள் வரும். எதிர்பார்த்த வேலைகள் முடியும்.கணவன் மனைவிக்குள் சிறு புகைச்சல்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீனம்
அந்நியர்களால் பண விரையமும், அலைச்சலும் ஏற்படும். உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE