கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி குரு பகவான் அதிசாரகதியாக பெயற்சியாகி இருக்கிறார் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச வீடான கடக ராசிக்குள் நுழைந்து பலன்களை வழங்குவார்.டிசம்பர் மாதம் 4-ம் தேதிவரை கடக ராசியில் சஞ்சரிப்பார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குரு பகவானால் உங்கள் ராசிக்கு பெரிய பலன்கள் எதுவும் வழங்கவில்லை இந்த அதிசார பலன் என்பது 4-ம் ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு செல்வதால் குரு பகவான் உங்கள் ராசிக்கு பல நன்மைகளை வாரி வழங்குவார் தடைபட்ட திருமணங்கள் தடை இன்றி நடக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள் கணவன் மனைவி உறவு பலப்படும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
குரு தான் நின்ற வீட்டிற்கும் பார்வைப்படும் இடங்களுக்கும் பலன்களை வழங்குவார் அவ்வகையில் 5-ம் பார்வையாக 9-ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள் தந்தை ஸ்தானம் பலப்படும் புண்ணிய யாத்திரைகள் மேற்கொள்ள முடியும் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் குலதெய்வத்தின் அருள் ஆசிகள் கிடைக்கும்.
7-ம் பார்வையாக 11-ம் வீடான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெற முடியும் மூத்த சகோதரர்களின் ஆதரவும் அவர்களால் உதவியும் கிடைக்கும் திடீர் பண வரவுகளால் பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
9-ம் பார்வையாக குருபகவான் ராசியை பார்ப்பதால் உயர்ந்த சிந்தனைகள் நினைத்த காரியம் நடைபெறும் உடல் ஆரோக்கியம் மேம்படும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும் சுய சிந்தனை கற்பனை வளம் அதிகமாக காணப்படும் பொது சேவைகளில் ஈடுபாடு பெரியோர்களை மதிக்கும் குணம் உண்டாகும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவான் வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்து வாருங்கள் கால் நடைகளுக்கு அகத்திக்கீரை வாழைப்பழம் வெல்லம் வாங்கி தாருங்கள் கர்மவினைகள் தீரும் நல்லதே நடக்கும்.