குருபகவான் அதிசார பலன்கள் 2025 - கும்பம்

By செய்திப்பிரிவு

கும்பராசி நண்பர்களே அக்டோபர் மாதம் 18-ம் தேதி குரு பகவான் அதிசார கதியாக மிதுன ராசியில் இருந்து கடகத்துக்குள் நுழைந்திருக்கிறார் டிசம்பர் மாதம் வரை குரு கடகத்தில் அமர்ந்து  உங்கள் ராசிக்கான பலன்களை  எப்படி வழங்க இருக்கும் என்பதை காண்போம்.

ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து யோக பலன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த குரு பகவான் தற்சமயம் இந்த குரு அதிசார பலன்களால் ராசிக்கு 6-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி இருக்கிறார் 6-ம் இடம் என்பது ருணஸ்தானம் என்பதால் பண இழப்புகளும் தொழில் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவாகரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்துங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்து பண சேமிப்பில் நாட்டம் காட்டுங்கள்.

குரு தான் நின்ற வீட்டை விட பார்வைப்படும் இடங்களில் பலன்கள் அதிகமாக இருக்கும் அவ்வகையில் குரு பகவான் 5-ம் பார்வையாக 10-ம் வீட்டை பார்ப்பதால் திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் உருவாகும் புதிய தொழில் மூலமாக லாபம் பெற முடியும் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வருமானத்துக்கு குறை இருக்காது வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

ஏழாம் பார்வையாக 12 ஆம் வீட்டை பார்ப்பதால் மருத்துவ விரைவு செலவுகள் கட்டுக்குள் வரும் சுப விரைய செலவுகள் உண்டாகும் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளுவீர்கள் கோயில் வழிபாடு தலங்களுக்கு சென்று வருவீர்கள் சிலருக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

ஒன்பதாம் பார்வையாக தனஸ்தானமான இரண்டாம் வீட்டை பார்ப்பதால் பண சேமிப்புகள் உண்டாகும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் குடும்ப உறவுகள் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும் புதிய நட்பு மலரும்.புதிய வாகன யோகமும் சிலருக்கு புதுவீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

பராகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவர் வழிபாடும் தேய்பிறை அஷ்டமி திதியில் அர்ச்சனையும் செய்து வரவும் இயலாதவர்களுக்கு உதவிகள் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE