விருச்சிகராசி நண்பர்களே கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்திருக்கிறார் டிசம்பர் மாதம் வரை கடக ராசிக்குள் சஞ்சரிப்பார் இந்த அதிசார பலன்களில் யோகம் பெறக்கூடிய ராசிகளில் உங்கள் ராசியும் ஒன்று ராசிக்கு எட்டாம் இடத்தில் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்த குரு பல தீமைகளை தந்திருப்பார் பணமிழப்புகள் தொழில் நஷ்டம் என பல சங்கடங்களையும் தந்திருப்பார் தற்சமயம் இந்த குரு பெயர்ச்சியானது 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதால் பொன் பொருள் யோகம் உண்டாகும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் பண சேமிப்புகள் உண்டாகும் கடன்கள் அடைப்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.
குருவின் பார்வைபடும் இடங்களுக்கும் யோகம் பலன்கள் உண்டாகும் அவ்வகையில் 5-ம் பார்வையாக ராசியை பார்ப்பதால் உடல் ஆரோகியம் நன்றாக இருக்கும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும்.
7-ம் பார்வையாக 3-ம் வீட்டை பார்ப்பதால் புதிய மனிதர்களின் சந்திப்புகள் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
பொது ஊடகங்களில் பிரபலமாகும்
யோக அமைப்புகள் உண்டாகும்.
நீண்ட காலமாக விற்பனை ஆகாத சொத்துகள் விற்பனை செய்வீர்கள்.
9-ம் பார்வையாக 5-ம் வீட்டை பார்ப்பதால் தந்தை மகன் உறவு பலப்டும் பிள்ளைகளால் ஆதாயம் பெறுவீர்கள் திருமண வயதில் இருக்கூடிய மகன் மகள்களுக்கு திருமணங்கள் நடக்கும் கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பகைகள் அகலும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்கிழமைகளில் மலைக்கோவிலில் வீற்றிருக்கும் முருக பெருமானை தரிசனம் செய்து வாருங்கள் சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.