சிம்மராசி நண்பர்களே கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி குரு பகவான் அதிசார கதியாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் பிரவேசித்திருக்கிறார் டிசம்பர் மாதம் வரை கடகத்தில் பயணித்து பிறகு மிதுன ராசிக்குள் சென்று விடுவார் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரையத்துக்குள் வருகிறார் இதனால் குடும்பத்தில் சுப விரய செலவுகள் உண்டாகும் வீண் ஆடம்பர செலவுகளும் அதனால் பண இழப்புகளும் உண்டாகும் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும்.
குரு தான் நின்ற இடத்தை விட பார்க்கும் இடங்களுக்கு பலம் அதிகமாக இருக்கும் அந்த வகையில் குரு தனது 5-ம் பார்வையாக 4-ம் வீட்டை பார்ப்பதால் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் தாயாரின் உடல்நலம் மேம்படும் வீடு மனை நிலம் போன்ற சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உண்டு புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.
7-ம் பார்வையாக 6-ம் வீட்டை பார்ப்பதால் எதிரிகள் தொல்லை குறையும் தொழில் போட்டிகள் குறையும் கடின உடல் உழைப்பு இருக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் நீண்டகால வழக்குகள் முடிவுக்கு வரும்.
9-ம் பார்வையாக 8-ம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் திடீர் தன வரவுகள் உண்டாகும் சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள் விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும் கடன்கள் அடைபடும் உடல்நல பிரச்சனைகள் தீரும் தேகம் ஆரோக்கியமாக காணப்படும்.
எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும் நினைத்த காரியங்கள் சக்சஸ் ஆகும்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள நவகிரக சூரியனை வழிபாடு செய்யுங்கள் பிரதோஷ தினத்தன்று சிவபெருமான் வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.