குருபகவான் அதிசார பலன்கள் 2025 - மிதுனம்

By செய்திப்பிரிவு

அக்டோபர் 18-ம் தேதி  குருபகவன் அதிசார பெயர்ச்சி காரணமாக உங்கள் ராசிக்குள் இருந்து ஜென்ம குருவாக இருந்து வந்துள்ளார் தற்சமயம் 2-ம் இடமான தன ஸ்தானத்தில் இருக்கிறார் டிசம்பர் மாதம் வரை கடகத்தில் உச்சம் பெற்றிருப்பதால். மிதுனராசியான உங்களுக்கு நற்பலன்கள் நடக்கும்.

2-ம் இடம் என்பது தனம் குடும்பம் கல்வி ஸ்தானம் என்பதால் பண வரவுகள் நான்றாக இருக்கும்  தொழில் வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் தங்கத்தில் முதலீடுகள் செய்ய முடியும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.

குரு தான் நின்ற இடத்துக்கும் பலன் பார்க்கும் இடங்களுக்கும் பலன்களை வாரி வழங்கும்.
5-ம் பார்வையாக 6-ம் வீட்டை பார்ப்பதால் கடன்கள் அடைபடும்

எதிரிகள் தொல்லைகள் தீரும்
கடின உடல் உழைப்பும் அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும்.

7-ம் பார்வையாக 8-ம் வீட்டை பார்ப்பதால் மருத்துவ விரையங்கள் கட்டுக்குள் வரும்
உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பங்களிகளுக்குள் இருந்து வந்த பகைகள் மறையும் சொத்து பிரச்சனைகள் தீரும்.
வழக்குகள் வாபஸ் ஆகும்.

9-ம் பார்வையாக 10-ம் வீட்டை பார்ப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் உத்யோகத்தில் பதவி உயர்கள் உண்டாகும் வேலை இழந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்

வெளிநாடு வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும் 
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வரவும் பௌர்ணமி திதியன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE