ரிஷபராசி நண்பர்களே இந்த நவம்பர்மாத ராசி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
வழக்கம் இந்த ஆண்டு முழுவதும் வருட கோள்களில் சனிபகவான் ராகு மற்றும் குருபவான் ஆகிய மூன்று கோள்களும் நற்பலன்களை வழங்கி வருகிறது.. இம்மாதம் குருபகவான் அதிச்சார கதியாக இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார்.
3- ம் இடம் என்பது அவளவு நன்மைகளை வழங்கூடிய இடமல்ல .
11-ம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் வழக்குகள் வாபஸ் ஆகும் வெளியூர் வெளிநாடு பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். 10-ம் இடத்தில் ராகு இருப்பதால் புதிய வேலை வாய்புகள் உருவாகும் பண தேவைகள் பூர்த்தியாகும்.
நவம்பர் 17-ம் தேதிவரை சூரியன் பலம் பெற்று 6-ம் இடத்தில் சஞ்சரிப்பார் இதனால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அரசியல் செல்வாக்கு கூடும் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள்.
இம்மாதம் சுக்கிரன் 6 மற்றும் 7-ம் இடங்களில் பலவீனப்படுவதால் குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும் கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லாமல் போகும் உறவினர்களால் குடும்பத்தில் சண்டைகள் உருவாகும் அன்னிய பெண்களால் அவப்பெயர் உண்டாகும்.
இம்மாதம் செவ்வாய் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் அவசர முடிவுகளால் சில இழப்புகள் உண்டாகும் தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
நவம்பர் 24-ம் தேதிவரை புதன் 7-ம் இடத்தில் அமர்ந்து சோம்பலை உருவாக்குவார் மந்தநிலை காணப்படும் அடிக்கடி வேலைக்கு லீவ் போடுவீர்கள் மேலாளரிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்.
24-ம் தேதிக்கு பிறகு புதன் வக்ரகதி காரணமாக 6-ம் இடத்தில் நன்மைகளை வழங்குவார்.
4-ம் இடத்தில் கேது இருப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துஙகள் தாயாரிடம் வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள்.
நவம்பர் 23,24,25 சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வினாயகர் வழிபாடு செய்து வரவும் சதுர்த்தி திதியில் அன்னதானம் செய்வதும் சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.