நவமி திதியில் என்னென்ன செய்ய கூடாது?

By சரவணன்

அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நவமி திதியில் தான் ஸ்ரீ ராமர் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்ததுதான் காரணம். எனவே நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. ஆனால், தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

பொதுவாக, அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். 

உதாரணமாக தாக்குதல், பதிலடி தருதல், வீழ்த்துதல், பழி வாங்குதல் போன்ற எண்ணங்கள் அந்த திதிகளில் அதிகரிக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். 

நவமி புராணக்கதை :
நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களின் கவலையை கூறினார்கள்.

அப்போது விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக ராமபிரான் பிறந்தார். அன்றைய தினம் ராமநவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

நவமியில் தெய்வங்களுக்கு உயிர் பலிக்கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம்.

இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மேலும், இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்து காரியமும் சுபமாக நடைபெறும்.

நவமி திதியில் என்னென்ன செய்யலாம்?
நவமி திதியில் எதிரிகளை வெல்லுதல், தெய்வங்களுக்கு பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவை செய்வது சிறப்பாகும். 

புதிய வேலைகளுக்கு செல்லலாம், நல்ல காரியங்கள் செய்யலாம், நகைகள் மற்றும் ஆடைகள் வாங்கலாம், தர்ம காரியங்கள் செய்யலாம், ஆயுதங்கள் செய்தல் மற்றும் உபயோகித்தல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் போன்றவை செய்யலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE