நாகரிகம் தோன்றாத காலங்களில் இருந்தே அறிவியல் மற்றும் எவ்வித தொழில்நுட்பமும் இல்லாத நாட்களிலே 9 நவக்கிரகங்களையும் , 9 கோள்களையும் கண்டறிந்தது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். ஒரு மனிதனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை இப்படி தான் நடக்கவேண்டும் என்றும், எந்த அறிவியலும் இல்லாத காலத்திலேயே எதிர்க்காலத்தை கணிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொரு உயிர்க்கும் தங்கள் வாழும் காலங்களில் இந்த நேரத்தில், இந்த காலத்தில், பல இன்ப துன்பங்களை கடந்து, இவ்வாறு தான் பூமியில் நீ வாழ போகின்றாய் என்ற பல கணக்கை கடவுள் அவரவர் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்றவாறு வழங்குகிறார். நவகிரகங்கள் என்பது கடவுளா, மனிதர்களா அல்லது தேவர்கள, இந்த நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் பதவிகள் எப்படி கிடைத்தது, இந்த பதவியை யார் வழங்கியது என்ற பல தகவல்களை பற்றி இங்கு காண்போம் .
இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிரை உருவாக்க படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வேலைகளை செய்ய பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் என்ற மூன்று தெய்வங்கள் மூலமாக கவனிக்கப்படுகிறது. இதில் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதாவது முன் ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையில் அனைத்து விதமான இன்ப துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன .
அப்புராணங்களின் அடிப்படையில் மனிதர்களின் கர்ம வினைகள் அனைத்தையும் கண்காணிக்க சிவபெருமானிடம் இருந்து உருவாக்கப்பட்டவர்கள் தான் நவகிரகங்கள். நவகிரகங்கள் அனைவரும் சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். மொத்தம் 9 நவகிரகங்கள் உள்ளது. இந்த ஒன்பது நவகிரகங்களும் ஒரே நேரத்தில் தோண்றியது அல்ல. ஒவ்வொரு சூழலிலும், தனி தனியே பல முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் மகன்களாக பிறந்தவர்கள். நவகிரகங்கள் அவரவர் தந்தையின் வழிகாட்டுதல் பெயரிலும், கடும் தவம் புரிந்த பிறகே இப்பதவி அனைவருக்கும் கிடைத்தது .
நவக்கிரகம் :
ஒவ்வொரு மனிதனுடைய பாவ ,புண்ணியத்தின் அடிப்படையில் அவர்களுக்கு சரியான பலன்களையும், வாழ்க்கையை நல்வழிப்படுத்த இறைவனால் உருவாக்கப்பட்ட 9 நபர்கள் தான் நவ கிரகங்கள் என்று சொல்லுவோம். அவை
1.சூரிய பகவான்
2.சந்திர பகவான்
3.புதன் பகவான்
4.செவ்வாய் பகவான்
5.குரு பகவான்
6.சுக்கிரன் பகவான்
7.சனி பகவான்
8.ராகு பகவான்
9.கேது பகவான்
என ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இந்த 9 நவகிரகங்களை இரண்டு பிரிவாக பார்க்கலாம். அதில் ஒன்று 7 நவகிரகங்களாகவும், மற்றொன்று 2 நவக்கிரகங்களாகவும் பிரிக்கப்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட ஏழு நவகிரகங்களான சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், குரு, சுக்கிரன் ,சனி இவை அனைத்திற்கும், வாரத்தின் நாட்களான 7 நாட்களுக்கும் சில பிணைப்பு உண்டு. அதே போல இரண்டாவதாக சொல்லப்படும் ராகு பகவானும் ,கேது பகவானும் தனியாக பார்க்கப்படுகிறது .
நவகிரகங்களை எப்படி சுற்றிவருவது :
பின்பு பக்தர்களுக்கு மனதில் சில குழப்பங்களும் இருக்கும், அதாவது எந்த பக்கம் முதலில் சுற்றுவது, எந்தெந்த நவகிரகங்களை எப்படி வழிபடவேண்டும் என பல கேள்விகள் உண்டு. சிலர் முதல் வகையான 7 நவகிரகங்களை இட பக்கத்திலிருந்து வலது பக்கம் பக்தர்கள் சுற்றிவரவேண்டும் எனவும், மற்ற 2 நவக்கிரகங்களான ராகுவும், கேதுவும் வலது புறத்திலிருந்து இடது புறமாக பக்தர்கள் சுற்றிவர வேண்டும் என பல கருத்துக்கள் மக்களிடையே நிலவுகிறது.
அதற்கான விடைதான் இதோ ,
*ஒரு கோவிலுக்கு செல்லும் போது அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பிறகு தான் நவகிரகங்களை சுற்றிவரவேண்டும்.
*வலது புறம், இடது புறம் என்ற பாகுபாடில்லை. பக்தர்கள் எப்படி வேண்டுமானாலும் சுற்றலாம்.
*ஆனால் 9 முறை மட்டும் சுற்றி வந்தாலே போதுமானது.
*நவக்கிரகங்களான சூரிய பகவான், சந்திர பகவான், புதன் பகவான், செவ்வாய் பகவான், குரு பகவான், சுக்கிரன் பகவான், சனி பகவான், ராகு பகவான், கேது பகவான் என அனைவரையும் சுற்றி வருவதுதான் முறை.
*முக்கியமாக எந்த நவக்கிரக சிலைகளையும் கைகளால் தொட்டு வணங்கக் கூடாது என்பது ஐதீகமாக கூறப்படுகிறது .
இப்பொழுது ஒவ்வொரு நவகிரங்களை பற்றி விரைவாக சில தகவல்களை பார்ப்போம்.
நவகிரகங்களின் இடம் பெயர்ச்சி :
9 நவகிரகங்களான சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற அனைத்து பகவான்களையும் மனிதனுடைய பாவ புன்னியங்களுக்கு ஏற்ப இடம் பெரியர்ச்சியடைய செய்கின்றனர். அவ்வாறு இடம் பெயர்தல் என்பது தின கிரகம், மாத கிரகம், வருட கிரகம் என நவகிரகங்களை வகைப்படுத்திகிறார்கள். அவைகளாவது
தின கிரகம் - இந்த தின கிரகம் என்பது தினமும் மாறிக்கொண்டே இருக்கும். சந்திர பகவான் தின கிரக அடிப்படையில் தினம் தினம் இடம் பெயர்கிறார்.
மாத கிரகம் - சூரிய பகவான் ,புதன் பகவான் ,செவ்வாய் பகவான் ,சுக்கிரன் போன்ற பகவான்கள் மாதத்திற்க்கு ஒரு முறை இடம் பெயர்ச்சி நடைபெறும் .
வருட கிரகம் -குரு பகவான் பக்தர்களுடைய பாவ புன்னியத்தின் அடிப்படையில் வருடத்திற்கு ஒரு முறை இடம் பெயர்ந்து நல்லதை நடத்துவர் .
சனி பகவான் 2 1/2 வருடத்திற்கு ஒரு முறையும், ராகு மற்றும் கேது பகவான் 1 1/2 வருடத்திற்கு ஒரு முறையும் இடம் பெயருவர்கள். இந்த ஒன்பது கிரகங்களில் சனி பகவான்தான் அதிக வருடத்தை அக்கிரமித்துள்ளதால் இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நவகிரகங்கள் தோன்றிய வரலாறு:
உலகம் இயங்க காரணமாக இருப்பது நவகிரகங்கள் தான், ஒவ்வொரு நவகிரகங்களும் ஒவ்வொரு தனித்தனி குணங்களை கொண்டுள்ளது. அனைத்து நவகிரகங்களும் மனித உடலில் குடியேறுள்ளது என்றால் நம்மில் சிலருக்கு வியப்பாக உள்ளது. மனிதனின் அனைத்து உறுப்புகளையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது இந்த நவகிரகங்கள. ஆம் நமது உடலில் ஏழு வகையான சக்கரங்கள் கண்ணனுக்கு தெரியாமல் உள்ளது. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளது, இருப்பினும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
அதே போல வாரங்களின் நாட்களான திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய ஏழு நாட்களுக்கும் ஏழு கிரகங்களும் சிறு ஒற்றுமை உண்டு என கூறியிருந்தோம். அவை நவகிரகங்களை தேடி வரும் பக்தர்கள் வழிபாடும் நாட்கள் தான்.
*ஞாயிற்று கிழமை - சூரிய பகவானை வழிபட சிறந்த நாள்.
*திங்கட் கிழமை -சந்திரன் பகவானை வழிபாடு செய்ய உகந்த நாள்.
*செவ்வாய் கிழமை - செவ்வாய் பகவானை வழிபாடும் நாள்.
*புதன் கிழமை - புதன் பகவானை வழிபட சிறந்த நாள்.
*வியாழன் கிழமை - குரு பகவானை வழிபட நல்ல நாள்.
*வெள்ளி கிழமை - சுக்கிரன் பகவானை வழிபட சிறந்த நாள்.
*சனி கிழமை - சனி பகவானை வணங்க வேண்டிய நாள்.
இவ்வாறு ஏழு நாட்களுக்கும், ஏழு கிரகங்களுக்கும் சின்ன ஒற்றுமை உண்டு. இப்பொழுது நவகிரகங்களை பற்றி விரிவாக காண்போம் .
1.சூரிய பகவான் :
நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். சூரிய பகவானை வழிபடுவதால் வாழ்வில் மங்களம் உண்டாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இவர் மாதத்திற்கு ஒரு முறை இடம் பெயர்வார். தலைவர் என்ற பதவி இவருக்குரியது .
சிம்மராசிக்கு அதிபதியான சூரிய பகவானுக்கு பிடித்த தானியம் கோதுமை. சூரிய பகவானுக்கு உகந்த செந்தாமரை மலரை செலுத்தி வணங்கி வந்தால் நமக்கு நல்லதே நடக்கும். பிடித்த உணவு சக்கரை பொங்கல்.
வரலாறு :
பிரம்மா ஈரேழு உலகத்தை படைக்கும் பொழுது அனைத்து உலகங்களும் இருளாக இருந்தது. அந்த இருளை போக்க பிரகாசமாக அவதரித்தவர் தான் சூரிய பகவான். சிவா பெருமானை நோக்கி சூரிய பகவான் கடும் தவம் புரிந்து நவகிரகங்களில் முதல் இடத்தை பிடித்தார். சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக இருப்பவர்.
2.சந்திர பகவான் :
ஒன்பது நவகிரகங்களில் மிகவும் அழகானவர் நம்முடைய சந்திர பகவான். இவர் மிகவும் குளிர்ச்சியானவர். இவர் மிகவும் அழகாக இருப்பதினால் 27 நட்சத்திர பெண்களை மணந்தவர் என்றும் புராணங்கள் கூறுகின்றனர். இவர் கடக ராசிக்கு சொந்தக்காரர். சந்திர பகவானுக்கு உகந்த உணவு தயிர் சாதம். உகந்த தானியம் அரிசி, சந்திர பகவானுக்கு பிடித்த மலர் செவ்வல்லி பூ. இவர் தினமும் இடம் பெயரும் கிரகமாகும். புகழுக்கு சொந்தகாரர் .
வரலாறு :
சந்திர பகவானை அதிகமாக யாருக்கும் பிடிக்காது. காரணம் இவர் மானிட பிறவி எடுத்து மிகவும் அழகாக இருந்தார் . பிறவிலேயே சிறந்த மானிட பிறவி என்ற பெருமையை கொண்டவர். இந்த மானிட பிறவியில் எந்த வித ஊனமும் இன்றி நல்ல அழகோடு பிறந்தவர் தான் சந்திரன். இதனால் சந்திர பகவானுக்கு மனதில் கர்வம் ஏற்பட்டு பல தவறுகளை செய்துவந்தார். சந்திர பகவான் அத்திரி மகரிஷிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர். இவருடைய பெயர் சோமன். சோமன் பிரம்மாவை நோக்கி பல கோடி ஆண்டுகள் தவம் இருந்து நவகிரகங்களில் ஒருவராக சந்திர பகவானாக வரம் பெற்றார். இதனால் தான் சோமன் சந்திர தேவனாக தோற்றமளிக்கிறார்.
3. புதன் பகவான் :
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பெருமைக்குரிய புதன் பகவான் அறிவு தெய்வமாகும். இவரை வழிபாடுபவருக்கு நல்ல புத்தி கிடைக்கும். இவர் மிதுனம், கன்னி ராசிக்கு அதிபதி. இவர் மாதத்திற்கு ஒரு முறை மட்டும் இடம் பெயர்வார். உகந்த தானியம் பயிறு வெண்காந்த மலரை செலுத்தி வணங்கி வந்தால் நல்லது. உகந்த உணவு பாசிப்பருப்பு பொடி சாதம்.
வரலாறு :
புதன் என்பவர் நாராயணனுடைய அம்சமாக இருப்பவர். இவர் சந்திர பகவானுடைய மகன். புதனுக்கு வாழ்க்கையில் இல்லற வாழ்க்கையின் மீது விருப்பம் இல்லை. இதனால் துறவறம் மேற்கொள்கிறார், திருமண வாழ்க்கையை பிடிக்காததை அறிந்த தேவலோக பெண் புதனை திருநங்கையாக மாற சாபமிடுகிறாள். இதனால் புத பகவான் சிவபெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொள்கிறார் .
சிவபெருமான் புதனுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுக்கிறார். புதனும் கலைகளில் சிறந்து விளங்குகின்றார். சிவபெருமான் நவகிரகங்களில் ஒன்றாக புதனை உயர்த்துகிறார். ''தீமைகளை அழித்து நல்லதை உண்டாக்கும் சக்தி புதனுக்கு உண்டு''.
4. செவ்வாய் பகவான் (அங்காரகன் ):
செவ்வாய் பகவான் வீரபத்திர அம்சத்தை சார்ந்தவர். மேஷம், விருச்சகம் ராசிக்கு அதிபதியான இவர் தைரியம் அதிகமாக கொண்டவர். மாதத்திற்கு ஒரு முறை இடம் பெயர்வார். இவர் வைத்தியர் என்ற பெருமைக்கு உரியவர். தீராத நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டவர் உகந்த தானியம் துவரை. செண்பக பூவை செவ்வாய் பகவானுக்கு சாத்திவந்தால் நன்மை உண்டாகும்.
வரலாறு :
ஒரு கொடிய அரக்கன் இருந்து வந்தான். அவன் தேவர்களையும், முனிவர்களையும் பல இன்னலுக்கு அளக்கினான். இதனால் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் சிவபெருமானை நோக்கி சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். இதனை அறிந்த சிவபெருமான் பல ஆண்டுகளாக கொடிய அரக்கனுடன் வதம் வானத்தில் புரிந்து வந்தார். அவ்வாறு வதம் புரியும் போது ஒரு நாள் சிவபெருமானின் உடலில் இருந்து வெளியேறிய வியர்வை துளி பூமியில் விழுந்து இருபாகமாக பிரிந்துள்ளது. அதில் உருவானவர் தான் செவ்வாய் கிரகம்.
அந்த அரக்கனிடம் சிவபெருமான் போர் புரிந்ததற்கான காரணம் என்னவென்றால், அரக்கனின் உடலில் இருந்து ரத்தம் தரையில் விழுந்தால் அவனை போல ஓராயிரம் அரக்கர்கள் உருவாகிவிடும் வரத்தினை சிவபெருமான் முன்னொரு காலத்தில் தவத்தின் பலனாக வரம் அளித்தார். இந்த வரத்தின் காரணமாக தான் அரக்கனின் செயல்களில் ஆணவம் அதிகரித்தது .
அந்த அரக்கனின் ரத்தத்தை செவ்வாய் கிரகம் உள்வங்கியதால் தான் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறார். பூமா தேவியால் சில வருடங்கள் வளர்க்கப்பட்ட பெருமையும் செவ்வாய்க்கு உண்டு. பூமா தேவியிடம் வளர்ந்ததால் ''பூமிக்காரன்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு .
செவ்வாய் பகவான் அனைத்து வித்தைகளிலும், கலைகளிலும் சீக்கிரமே கற்று தேர்ந்தவன் என்ற சிறப்பும் உண்டு. இவர் பெற்ற அன்னையின் மடியில் வளராமல்,வளர்ப்பு தாயான பூமா தேவியிடம் வளர்ந்ததால் இவருக்கு குடும்பம், உறவு, தாய், மனைவி, இல்லறவாழ்க்கை என எதிலும் விருப்பமில்லை.
இதனால் தான் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோசம் உடையவர்களுக்கு வாழ்க்கை இனிமையாக இருப்பதில்லை, உறவுகளையும் பிடிப்பதில்லை. செவ்வாய் பகவான் நின்றாலும், பார்த்தாலும் சரி அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மிகுந்த பாதிப்பை அடைகின்றனர் .
5.குரு பகவான் :
குரு பார்வையில் தோசம் விலகும். குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்பது பழமொழி. இவர் மீனம் ,தனுசு ராசிக்கு அதிபதி. முல்லை மலரை குரு பகவானுக்கு அணிவித்து வழிபடுவதால் கோடி பலன்கள் உண்டாகும். குரு பகவான் செல்வத்தையும், குழந்தை பாக்கியத்தையும் கொடுப்பார். வருடத்திற்க்கு ஒருமுறை மட்டுமே இடம் பெயர்வார் .
வரலாறு :
குரு பகவான் அறிவில் சிறந்து விளங்குபவர். தேவர்களுக்கே குருவாக உள்ளார் என்ற பெருமை உண்டு. இவருக்கு ஞானத்தலைவர் என்ற பெயரும் உண்டு. இவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இதன் பலனாக தேவர்களுக்கு குருவாகவும், நவகிரகங்களில் ஒருவராகவும் உள்ளார். 64 கலைகளையும் கற்று தேர்ந்தவர் என்ற பெருமையும் உண்டு.
6.சுக்கிர பகவான் :
சுக்கிர பகவான் அதிபுத்திசாலி. ஒருவருடைய ஜாதகத்தில் இந்த திசை இருந்தால் அதிஷ்டம் அடித்துக்கொண்டு வரும். சுக்கிர பகவான் ரிஷபம், துலாம் ராசிக்கு அதிபதி. வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு உண்டு. சுக்கிர பகவானும் மாதத்திற்கு ஒருமுறை இடம் பெயருபவர். சுக்கிரபகவனுக்கு ஒரு கண் கிடையாது. வெண்தாமரை சாத்தி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
வரலாறு :
சுக்கிர பகவான் சிவபெருமானின் வயிற்றில் 1000 ஆண்டுகள் கடும் தவம் புரிந்த பிறகு நவகிரகங்களில் ஒருவராக வரம் தருகிறார். சுக்கிர பகவான் மிகவும் திறமைசாலி. திறமைசாலியாக இருந்தாலும் குருபகவான் ஏற்கனவே இருப்பதால், குருபகவானுக்கு எதிரான அசுரருக்கு குருவாக அமர்த்துகிறார் .
சுக்கிர பகவானுக்கு ஒரு கண் இல்லாமல் போனதற்க்கு விஷ்ணு பகவான் தான் காரணம் .ஒரு முறை பகைவர்களை விஷ்ணு பகவான் அழிக்க செல்லும் பொழுது அதை தடுக்கிறார் சுக்கிர பகவான் .இதனால் கோபமடைந்த விஷ்ணு பகவான் ஒரு கண்ணை குருடாக்கிவிடுகிறார் .
7.சனி பகவான்:
சனி பகவான் இருந்தால் ஆயுள் பலம் பெரும். ஒரு கால் ஊனமானவர். அதிகபட்சமாக 2ஆண்டுகளுக்கு மேல் இடம் பெயர்ச்சி நடக்கும். இவர் சூரிய பகவானுடைய மகன். சனியை போல் கெடுப்பாரும் இல்லை, சனியை போல கொடுப்பவரும் யாரும் இல்லை என்பது பழமொழி. மகரம் மற்றும் கும்பம் ராசிக்கு அதிபதி. இந்தீவிர புஷ்பத்தை அணிவித்து வழிபட்டு வந்தால் தோசம் விலகும்.
வரலாறு :
சனி பகவான் நவகிரகங்களில் ''ஈஸ்வரன் என்ற பட்டத்தை '' பெற்ற சிறப்புடையவர். சூரியனுக்கு அடுத்தபடியாக சனி பகவானும், குரு பகவானும் தான் பெரிய கிரகங்கள். சனி பகவான் தன்னுடைய பெரியம்மாவிடம் சண்டை போடும்பொழுது காலால் எட்டி உதைத்து விடுகிறார். எம தர்மனுக்கு கோபம் வந்து சனி பகவானுடைய ஒரு காலை வெட்டி எடுத்துவிடுகிறார். ''இதனால் தான் சனி பகவானுக்கு ஒரு கால் இல்லாமல் இருக்கும்''.
8.ராகு மற்றும் கேது :
ராகு பகவான் :
அசுர தலையும், நாக உடலையும் கொண்டவர். ராகுவின் அருளால் அரச பதவி கிடைக்கும். ராகு ஒரு வருடத்திற்கு மேல் தான் இடம் பெயர்ச்சி அடைவார். ராகுவை கருநாகம் என்றும் அழைபார்கள்.ராகு பகவான் நிழல் கிரகம் என்பதால், வழிபட கிழமைகள் எதுவும் இல்லை .
கேது பகவான்:
கேது பகவான் நாகா உடலையும் ,அரசு உடலையும் கொண்டவர். இவரை செந்நாகம் என்றும் அழைப்பார்கள். கேது பகவானும் நிழல் கிரகம் என்பதால், இதற்கும் வழிபட கிழமைகள் எதுவும் இல்லை.
வரலாறு :
பார்க்கடலில் அமிர்தத்தை தேவர்கள் ஒருபுறம் , அசுரர்கள் ஒருபுறம் என இரண்டு தரப்பினரும் கடலை கடைந்து அமிர்தத்தை எடுக்கின்றனர். அப்பொழுது விஷ்ணு பகவான் மோகினியாக அவதாரம் எடுத்து, அமிர்தத்தை இரு தரப்பினருக்கும் சரி பாதியாக தருகிறேன் என வாக்குக்கொடுக்கிறார். அமிர்தத்தை உண்டு வந்தால் மரணம் இல்லை என்பதால் மோகினி அசுரர்களுக்கு கொடுத்தால் அவர்களுடைய அநியாயம் அதிகரித்துவிடும் என்பதால் அரக்கர்களுக்கு கொடுக்காமல், தேவர்களுக்கே அமிர்தத்தை வழங்கி வந்தால்.
மோகினியின் அழகில் மயங்கிய இருதரப்பினரும் மோகினியின் வார்த்தையை நம்பினார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு அசுரர்களுக்கு அமுதத்தை வழங்காமல் ஏமாற்றி வந்தாள். அசுரர்களின் கூட்டத்தில் ஒருவன் மோகினியின் நடத்தையை கவனித்து வந்தான், பின்பு தேவர்களாக மாறி வந்து அமுதத்தை சீக்கிரம் வாங்கி கொஞ்சம் பருகிவிட்டான்.
இதனை கண்ட தேவர்களில் ஒருவர் அந்த அசுரன் மேல் கோபமடைந்து மோகினியிடம் முறையிடுகின்றனர். இதனால் மோகினியாக உள்ள விஷ்ணு அமிர்தத்தை கொடுக்க வைத்திருந்த கரண்டியால் அந்த அசுரனுடைய தலையை வெட்டிவிடுகிறாள். பின்பு நம்பிக்கை துரோகம் செய்த காரணத்தினால் அசுரர்களுக்கு அமிர்தத்தை கொடுக்கவில்லை.
இதனால் கோபம் கொண்ட அசுர குலத்தினர் உன்னால் தான் எங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போனது, இனி நீ எங்களுடைய குலத்தில் வேண்டாம் என கூறிவிடுகின்றனர்.
அந்த அசுரன் கொஞ்சமாக அமிர்தத்தை குடித்ததால் அவனுக்கு மரணம் ஏற்படவில்லை. ஆனாலும் தலை மட்டும் உடலோடு இணைய வில்லை. பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்த தலை துண்டிக்கப்பட்ட அசுரன், தன்னுடை தலையை ஒன்று சேர்க்கும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் பிரம்ம தேவனோ விஷ்ணு பகவானால் வெட்டப்பட்ட உன் தலை ஒன்று கூட வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். ராகு, கேதுவிற்கு மட்டும் மூன்று வரங்களை அளிக்கிறார்.
* உடலின் மறுபாதி பாம்பாக அதாவது ராகுவாகவும் ,
*வெட்டப்பட்ட உடம்போடு 5 தலைகள் கொண்ட பாம்பு சேர்த்து கேதுவாகவும் இருக்க வரமளிக்கிறார் பிரம்மா .
*ராகும், கேதுவும் இணையும் போது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிகளை அடக்கி கிரகண தோஷத்தை ஏற்படுத்துவாய் என்றும், இதனால் உனக்கு கிரகணம் பிடிக்கும் மூன்றாவது வரத்தையும் பிரம்மா வழங்குகிறார் .
அதுமட்டுமில்லாமல் நீங்கள் பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் ,மோட்சம் பெற அனுகிரகம் செய்வீர்கள் எனவும் வரம் அளிக்கிறார் .