சூரியன் பலம்பெற்று 10 மற்றும் 11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தரும் அரசியல் செல்வாக்கு பெருகும் தந்தை மகன் உறவு பலப்படும் .வழக்குகள் வாபஸ் ஆகும்.பண தேவைகள் பூர்த்தியாகும்.
ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பலப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும் விற்காத சொத்துக்ள் விற்க்கவும் புதிய சொத்துக்கள் வாங்கவும் முடியும்.
இம்மாதம் 24ம் தேதிவரை புதனும் சூரியனுடன் இணைந்து சூரியபுதாதி யோகத்துடன் சஞ்சரிப்பதால் அபார ஞாபகசக்தி உண்டாகும் புத்தி சாதுர்சியத்தால் எதையும் சாதித்து காட்டூவீர்கள் சாணக்கிய தந்திரமும் அறிவும் ஒன்று சேரும் மாதமிது கூட்டு தொழில்கள் மூலமாக அதிக லாபத்தை பெறமுடியும்.
கேது 9-ம் இடத்தில் இருப்பதால் வியாபார விஷயமாக அடிக்கடி.வெளியூர் பயணங்கள் மேற்க்கொள்வீர்கள் பயணங்களால் அலைச்சல் உண்டாகும் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
இம்மாதம் 9-ம் தேதிவரை சுக்கிரனும் ராசிக்கு 9,ம் இடத்தில் பலத்துடன் காணப்படுவார் பிறகு 10ம் இடத்தில் பலவீனப்படுவதால்
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும்.
செவ்வாய் 27 ம் தேதிவரை 11ம் வீட்டில் பலம் பெறுவதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் தொல்லைகள் இருக்காது போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
குரு 7-ம் இடத்தில் இருப்பதால் திருமண சுபகாரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் உறவினர்கள் மூலமாக நற் செய்தி கிடைக்கும்.
4ம் வீட்டில் சனிபகவான் இருப்பதால் தாயாரிடம் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள் அன்னியமொழி காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் யாருக்கும் சப்போர்ட் செய்யாதீர்கள்.
அக்டோபர் 14,15,16 தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர் காவல் தெய்வங்களான ஐய்யனார்
வீரபத்திரர் கறுப்பண்ணசாமி போன்ற உக்கிர தெய்வ வழிபாடுகள் சிறப்பைத்தரும்.