அக்டோபர் மாதம் 2025 - துலாம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

சுக்கிரன் பலம் பெற்று 11 மற்றும் 12,ம் இடங்களில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய வாகன யோகம் உண்டாகும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் சிலருக்கு புதுவீடு கட்டும் அமைப்பும் உள்ளது. ச்ச்உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.

9-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன் மனைவி ஒற்றுமையும் திருமணம் குழந்தை பேறு போன்ற சுபகாரியங்களும் நடக்கும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

ராசிக்கு 6-ம் இடத்தில் வருட கோளான சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வெளிநாடுகளில் வேலைக்கு இருப்பவர்கள் வேலை மாற்றங்கள் செய்யலாம், சம்பள உயர்வு உண்டாகும் உடல் ஆரோக்கியம் மேம்படும் மருத்துவ விரைய செலவுகள் குறையும்.

5,ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் மன உளைச்சலும் சங்கடங்கள் உண்டாகும் வதந்திகளை நம்பாதீர்கள் எதையும் தீர விசாரித்து முடிவு எடுப்பது நல்லது யாருக்கு ஜாமீன் கையெழுத்துகள் போடாதீர்கள்.

வாய்க்கால் வரப்பு சொத்து என பங்காளி சண்டைகள் வரக்கூடும். கவனமும் நிதானமும் அவசியம். இம்மாதம் சூரியன் 12 மற்றும் 1,ம் இடங்களில் சஞ்சரிப்பதால் அரசாங்கப் பகைகள் வரக்கூடும் யாரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள் வம்பு வழக்குகள் சிக்கிக் கொள்ளாதீர்கள். 

புதனும் பலவீனமாக தென்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பங்குச்சந்தை மற்றும் டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் நஷ்டத்தை உண்டு பண்ணும். சோம்பல் சுறுசுறுப்பின்மை காணப்படும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் போடுவீர்கள்.

இம்மாதம் செவ்வாயும் 1மற்றும் -2ம் இடங்களில் அமர்ந்து பெரிய நற்பலன்களை தராது முன் கோபம் அதிகமாக காணப்படும் அவசர முடிவுகளால் பண இழப்புகள் உண்டாகும் சகோதரரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

லாப ஸ்தானமான 11,ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் தளங்களுக்கு சென்று வருவீர்கள் சுப விரைய செலவுகளால் மனநிறைவு உண்டாகும் தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.

அக்டோபர் 10,11,12 தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனையும் வழிபாடும் செய்து வாருங்கள் இயலாதவர்களுக்கு உணவு வாங்கித் தாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE