சுக்கிரன் 12, மற்றும் 1,ம் இடங்களில் பலத்துடன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர்களிடம் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் விலகும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் நிறைவேறும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புதிய வீடு கட்டும் யோகமும் உண்டு லோன் எளிதில் கிடைக்கும்.
வருட கோள்களில் குரு பகவான் அதே 10-ம் இடத்தில் குரு பலன்களை தந்து கொண்டிருக்கிறார் தொழில்களுக்காக புதிய முதலீடுகளை தவிற்க்கவும் வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.
ராகுபகவானும் ராசிக்கு ஆறாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பும் உண்டு பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். பங்காளிகளுக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் கேது இருப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
இம்மாதம் புதன் 2,ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பண விஷயங்களில் ஏமாற்றம் அடைய நேரம் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள் பங்குச்சந்தை டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் நஷ்டத்தை உண்டு பண்ணும் கவனம்.
இம்மாதம் சூரியனும் பலவீனமாக காணப்படுகிறார் இதனால் அரசாங்க பகைகள் வரக்கூடும் யாரையும் தேவையின்றி பகைத்துக் கொள்ளாதீர்கள் தந்தை மகனுக்குள் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நலம்.
இம்மாதம் 27-ம் தேதிவரை இரண்டாம் வீட்டில் செவ்வாய் பலவீனப்படுகிறார் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் துச்சமாக நினைத்து எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள்.
ராசிக்குள் 7ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் உடல்நல குறைபாடுகள் வரக்கூடும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும் கவனம் அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அக்டோபர் 8,9,10.சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து
வழிபாடும் அர்ச்சனையும் செய்துவர நன்மைகள் நடக்கும்.