அக்டோபர் மாதம் 2025 - கடகம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

சுக்கிரன்  பலம் பெற்று  2, மற்றும்  3,ம் இடங்களில் சஞ்சரிப்பதால்  சுக்கிரனால்  பல நன்மைகளை காணலாம்  கணவன் மனைவி உறவு பலப்படும்  பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள்  சுகவாழ்வு மேம்படும்  உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்  பண தேவைகள் பூர்த்தியாகும்  புதிய வாகனம் யோகமும்  சிலருக்கு புது வீடு கட்டும் அமைப்பும் உண்டு .

வருட கோள்களில் குரு பகவான்  இவ்வருடம் முழுவதும்  ராசிக்கு 12,ம் இடமான  விரைய ஸ்தானத்தில் அமர்ந்து  விரையங்களை உண்டு பண்ணுவார் தேவையின்றி கடன் சுமைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். 

கேது 2,ம் வீட்டில் இருப்பதால்  ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்  தேக ஆரோக்கியம் காணப்படும்  மருத்துவ விரைய  செலவுகள்  வரும் .

அக்டோபர் 17.ம் தேதி வரை சூரியன்  ராசிக்கு  3,ம்  இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார்  அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கும்  வழக்குகள் வாபஸ் ஆகும்  போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் .

அக்டோபர் 24ம்  தேதிவரை  புதன்  தனது பங்கிற்கு 4,ம் வீட்டில்  நன்மைகளை வழங்குவார்  ஞாபக சக்தி அதிகமாக காணப்படும்  எதையும் இருந்த இடத்தில் இருந்தபடியே  சாதித்து  காட்டுவீர்கள்  பங்குச்சந்தை  மற்றும்  டிரேடிங்  ஆன்லைன் வியாபாரங்கள்  நல்ல லாபத்தை தரும்  முதலீடுகளால்  லாபம் பன்மடங்கு உயரும் .

இம்மாதம்  செவ்வாய் 4 மற்றும் 5-ம் இடங்களில்  பலவீனமாக தென்படுவதால்  முன்கோபம் அதிகமாக காணப்படும்  யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்  சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது  தொழில் எதிரிகள்  தொழில் போட்டிகள் இருக்கும் .

அஷ்டம ராகு நடப்பதால்  பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை  பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில்  தலையிடாதீர்கள்  ஜாமீன் கையெழுத்துக்கள் தவிர்க்கவும் .

ராசிக்கு 9,ம் வீட்டில் சனிபகவான் இருப்பதால்  புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்  வெளிநாடு வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்  பணியிடை மாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும்  கவனம்.

அக்டோபர் 4,5, சந்திராஷ்டமம்

பரிகாரம்!
அருகில் இருக்கும் முருகன் சந்நதியில்  6 நல்லெண்ணை தீபங்கள் ஏற்றி அர்ச்சனை செய்து ஆறுமுறை கோயில் பிரகாரத்தை சுற்றி வாருங்கள் நல்லதே நடக்கும்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE