சுக்கிரன் ராசிக்கு 4-மற்றும் 5-ம் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால், காரிய அனுகூலங்கள் உண்டாகும். நினைத்த காரியம் யாவும் வெற்றியைத் தரும் .கணவன் மனைவி உறவு பலப்படும்.
புதிய வாகன யோகமும் புது வீடு கட்டும் யோகமும் அமையும்.
ஆகஸ்ட் 17ம் தேதிவரை சூரியன் 5-ம் வீட்டில் பலவீனமாக தென்படுவார் பிறகு 6-ம் வீட்டில் பலப்படுவதால் .திடீர் தனவரவுகள், அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பெரிய பதவிகள்,
பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.
இம்மாதம் புதனும் அக்டோபர் 24-ம் தேதிவரை 6-ம் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், பொன்-பொருள் சேர்க்கை உண்டாகும். அபார ஞாபக சக்தி காணப்படும்
பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.
வருடக் கோள்களில், குரு 2ம் இடத்திலும் சனிபகவான் 11ம் இடத்திலும், ராகு 10ம் இடத்திலும் பலமாக இருப்பதால்,
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடக்கும்.
பங்காளிகளுக்குள் இருந்துவந்த பகை மறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் உருவாகும். மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும். தந்தை-மகன் உறவு பலப்படும்.
பழைய பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
இம்மாதம் 27-ம் தேதிவரை செவ்வாய் 6-ம் வீட்டில் பலப்படுவதால் துணிச்சலாக எதையும் செய்து முடிப்பீர்கள் தொழில் போட்டிகள் குறையும்.
4ம் வீட்டில் கேது பலவீனப்படுவதால், தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். தாயாருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.
ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் சிறப்பான மாதமாகும்.
அக்டோபர் 26,27,28 தேதிகளில் சந்திராஷ்டமம் .
பரிகாரம்:
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள்.
நல்லதே நடக்கும்.