அக்டோபர் மாதம் 2025 - மேஷராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

11ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், திடீர் பணவரவுகள் உண்டாகும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் யாவும் கைகூடும். மருத்துவ, விரைய செலவுகள் கட்டுக்குள் வரும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டு யோகம் உண்டு.
மாதம் முற்பாதி வரை சூரியன் 6-ம் இடத்தில் பலமாக தென்படுவதால் நன்மைகள் பல உண்டாகும். அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். காரியத் தடைகள் விலகும். வழக்குகள் வாபஸ் ஆகும்.

இம்மாதம் புதன், 7 ம்  இடத்தில் பலவீனமாகக் காணப்படுவதால் சற்று முன் எச்சரிக்கை தேவை. 
யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள்.  இம்மாதம் 27-ம் தேதி அஷ்டம ஸ்தானத்துக்கு சென்று நன்மைகளை வழங்குவார்.
ராசிக்கு 3ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், தொழில்களுக்காக புதிய முதலீடு எதையும் போடாதீர்கள். வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

இம்மாதம் செவ்வாயும் 7-மற்றும் 8-ம் இடங்களில் பலவீனமாகக் காணப்படுவதால், முன்கோபம் அதிகமாகக் காணப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

5ம் இடத்தில் கேது இருப்பதால், பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். கோயில், வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

12ம் இடமான விரய ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால், சுப விரைய செலவுகள் செய்வது நன்று. கையில் பணம் இருந்தால் வீடு, மனை, நிலங்களில் முதலீடு செய்யுங்கள்.

அக்டோபர் 24,25,26. தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்:
வாரந்தோறும் திங்கட்கிழமை நவக்கிரக சந்திரன் வழிபாடும் திருப்பதி ஏழுமலையான் வழிபாடும் சிறப்பைத்தரும். பௌர்ணமி பூஜை செய்வதால் செல்வம் செழிக்கும்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE