சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 9.56 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.52 மணிக்கு நிறைவடைகிறது.
செப்டம்பர் 7ஆம் தேதி மற்றும் 8-ம் தேதி உலகம் முழுவதும் கிரகணம் ஏற்பட போகிறது சந்திரன் மீது முழுவதுமாக ஒளிப்படாமல் இரத்த நிறத்தில் காட்சியளிக்க போகிறது.
பொதுவாக சந்திர கிரகணம் நடைபெறுவதற்கு 3 - 6 மணி நேரத்திற்கு முன்பே உணவருந்துதல் நல்லது
இந்த முறை சந்திர கிரகணம் கும்பம் இராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழ போகிறது.
கும்ப ராசியில் கிரகணம் நிகழ்வதால் திரிகோண நிலையில் உள்ள மிதுனம், துலாம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ஐந்து இராசிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பூராட்டாதி, விசாகம், புனர்பூசம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
சந்திர கிரகணத்தின் போது அரசியல் வாதிகள், அரசுப் பணிகளில் இருப்போர் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சந்திரனுக்குரிய தெய்வமாக இருப்பது அன்னை பராசக்தி. சந்திரனை தாய் கிரகம் என்பதால் சந்திர கிரகணத்தன்று அம்பிகையை வழிபட வேண்டும்.
உங்களுக்கு மிகவும் தெரிந்த ஸ்லோகங்களை தொடர்ந்து உச்சரிக்கலாம். அனைத்து இராசியினரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தையும் 108 முறை பாராயணம் செய்யலாம்.
அல்லது கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு இராசியினரும் ஜபிக்கலாம்
மேலும் குட்டி கலசத்தில் நெல், தர்ப்பை, ரூ.11 தட்சணையாக போட்டு சிவன் கோயிலில் தானம் செய்தால் பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
மேஷ இராசிக்காரர்கள் ஓம் நம சிவாய என ஜபிக்கவும்
ரிஷப இராசிக்காரர்கள் ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ என ஜபிக்கவும்
மிதுன இராசிக்காரர்கள் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என ஜபிக்கவும்
கடக இராசிக்காரர்கள் ஓம் கம் கணபதயே நமஹ என ஜபிக்கவும்
சிம்ம இராசிக்காரர்கள் மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபிக்கவும்
கன்னி இராசிக்காரர்கள் ஓம் ஹனுமதே நமஹ என ஜபிக்கவும்
துலாம் இராசிக்காரர்கள் ஓம் க்லும் கிருஷ்ணாய நமஹ என ஜபிக்கவும்
விருச்சிக இராசிக்காரர்கள் ஓம் நமோ நாராயணாய என ஜபிக்கவும்
தனுசு இராசிக்காரர்கள் ஓம் சரஸ்வத்யை நமஹ என ஜபிக்கவும்
மகர இராசிக்காரர்கள் ஓம் தன்வந்தரே நமஹ என ஜபிக்கவும்
கும்ப இராசிக்காரர்கள் ஓம் நமசிவாய என ஜபிக்கவும்
மீன இராசிக்காரர்கள் ஓம் சுக்ராய நமஹ என ஜபிக்கவும்