செப்டம்பர் மாதம் 2025 - மகரம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

வருட கோள்களில் சனிபகவான் உபஜெய ஸ்தானமான 3-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும். மருத்துவ விரைய செலவுகள் குறையும் தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் விலகி செல்வார்கள்.

செப்டம்பர் 14- தேதிக்கு மேல் செவ்வாய் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் ஸ்தானத்துக்கு செல்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

செப்டம்பர் 15-ம் தேதிவரை சுக்கிரன் 7-ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவார் பிறகு 8-ம் இடத்தில் பலம் பெற்று நன்மைகளை வழங்குவார் குடும்ப உறவுகளுக்குள் இருந்துவந்த பூசல்கள் மறையும் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மாத முற்பாதிவரை புதன் 8-ம் இடத்தில் பலப்படுகிறார்.
 
சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

இம்மாதம் சூரியன் 8-மற்றும் 9-ம் இடங்களில் பலவீனமாக இருப்பதால் அரசாங்க எதிர்ப்புகள் வரும் பெரிய மனிதர்களிடம் பகை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
இரண்டாம் இடத்தில் ராகுவும் 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் 
மனக்குழப்பங்கள் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.

6-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் வீண் செலவுகளை குறைத்து கொள்ளவும் யாருக்கும் ஜாமின் கையெப்பஙகள் இட வேண்டாம்.
செபடம்பர் 20,21 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் தேய்பிறை பைரவ வழிபாடு சிறப்பைத்தரும்.
நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE