செப்டம்பர் மாதம் 2025 - விருச்சிகம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

சூரியன் புதன் இரண்டு கோள்களும் தனது சொந்த வீடுகளில் பயணிப்பதால் நற்பலன்களை காணலாம்.  திடீர் பண வரவுகள் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும்.
 
கடன்கள் அடைபடும் சேமிப்புகள் உண்டாகும் பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும் 
புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

பங்குசந்தை முதலீடுகள் லாபம் பன்மடங்கு உயரும்.

கேது 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரங்கள் சிறப்படையும் வியாபார யுக்திகளை கையாண்டு லாபம் பன்மடங்கு உயர்த்துவீர்கள்.
செப்டம்பர்  14-ம் தேதிவரை செவ்வாய் 11-ம் வீட்டில் பலம் பெறகிறார் காரிய தடைகள் விலகும் துணிச்சல் தைரியம் பிறக்கும்.
செப்டம்பர் 15ம் தேதிவரை சுக்கிரன் 9-ம் இடத்தில் பலம் பெறுகிறார்.

பெண்களால் முன்னேற்றமும் உதவிகளும் கிடைக்கும் புதிய வாகன யோகம் உண்டு.
அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.

5-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பிள்ளைகளுடன் வாக்கு வாதங்கள் செய்ர வேண்டாம் விட்டுக்கொடுத்து போகவும்.
4-ம் இடத்தில் ராகு இருப்நதால் தாயாருக்கு்உடல்நல குறைபாடுகளும் மருத்துவ விரையங்களும் வரக்கூடும் கவனம்.

செப்டம்பர் 15,16,17 சந்திராஷ்டமம்.
 
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கற்பக விநாயகரை வணங்கி வரவும்.  
நல்லதே நடக்கும்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE