செப்டம்பர் மாதம் 2025 - சிம்மம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

குருபகவான் லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால் குடுமமபத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும் சுப காரியங்கள் நடக்கும்.சுக்கிரன் 12- மற்றும் ராசிக்குள்ளும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் புதிய சொத்துக்கள் வண்டி வாகன யோகமும் உண்டாகும்.
செப்டம்பர் 14-ம் தேதி செவ்வாய் 3-ம் இடத்துக்கு செல்வதால் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.

ராசிக்குள் கேதுவும் 7-ம் வீட்டில் ராகுவும் இருப்பதால் குடும்ப உறவுகளுக்குள் சலசலப்புகள் இருக்கும் உறவினர்களால் மன ஸ்தாபங்கள் உண்டாகும்.
அஷ்டமச்சனி நடப்பதால் தேவையில்லாத கடன் சுமைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் யாருக்கும் ஜாமின் கையெப்பங்கள்  போ வேண்டாம்.புதிய நபர்களிடம் எசாசரிக்கையாக இருக்கவும்.

இம்மாதம் சூரியன் 1-மற்றும் 2-ம் இடத்தில் பலவீனப்படுவதால் வேலையில் திருப்தி இருக்காது மேல் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்குவீர்கள்
இம்மாதம் புதனும் பலவீனப்படுவதால் மந்தநிலை காணப்படும் எந்த வேலையாக இருந்தாலும் தள்ளி போடுவீர்கள் பண சேமிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.

செப்டம்பர் 9,10,சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வரவும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE