சூரிய பகவான், தனது ஆட்சி இராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் கால கட்டமே “ஆவணி மாதம்” எனவும், “சிராவண மாதம்” எனவும் வழங்கப்படுகிறது.
நிச்சயதார்த்தம், உபநயனம், விவாகம், சீமந்தம் போன்ற சுப-நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதற்கு ஏற்ற மாதமும் இந்த ஆவணி மாதமே!
சிம்ம ராசியில் சஞ்சரிக்கும்போது, சூரியனின் வீரியம் பல மடங்கு அதிகரிப்பதாக மிகப் புராதன ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.
பரம பக்தியுடன் நாம் செய்யும் சிரார்த்தம் (திதி), தர்ப்பணம் போன்ற பித்ரு பூஜைகளின் பலன்களை மறைந்த நம் முன்னோர்களிடமும், மறு பிறவி எடுத்துள்ள பித்ருக்களிடமும் கொண்டு சேர்ப்பது சூரிய பகவானே!!
ஒவ்வொரு நாளுக்குரிய விசேஷங்கள்
ஆவணி 1 - (17-8-2025) :
ஆவணி மாதப் பிறப்பு. இன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம், பூஜை செய்வது குடும்பத்திற்கு நன்மை செய்யும். சூரியன், தனது ஆட்சி வீடான சிம்ம ராசிக்கு மாறும் தினம்.
மேலும், இன்றைய தினமானது, சனி பகவானின் ஜெயந்தி.
இன்றைய தினத்தில், நவக்கிரகக் கோயில்களுக்குச் சென்று, சனி பகவானுக்கு, கருப்பு வஸ்திரம் அணிவித்து, ஒன்பது மண் அகல் விளக்குகளில், செக்கிலாட்டிய நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபட்டால், சகலவித நற்பலன்களையும் நீங்கள் அடையப்போவது திண்ணம். கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், மண் அகல் விளக்கு தீபங்களை உங்கள் வீட்டுப் பூஜையறையிலேயே மேற்கூறிய மண் அகல் விளக்குகளை ஏற்றியும் பகவானை மனத்தளவில் பக்தி - சிரத்தையுடன் நினைத்து, வழிபடலாம். அதே நற்பலன்களைப் பெறுவது உறுதி. கீழே தந்துள்ள ஸ்லோகத்தை 9 அல்லது 18 முறைகள் ெசால்லி, வணங்க வேண்டும். இது, அனைத்துவித சனி தோஷங்களையும் போக்கவல்லது.
“நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸ்ம்பூதம் தம் நமாமி ஸநைஸசரம்”.
ஆவணி 3 - (19-8-2025) :
இன்று சர்வ ஏகாதசி. இன்று உபவாசமிருப்பது, அனைத்து பாபங்களையும் போக்கிவிடும்.
ஆவணி 4 - (20-8-2025) :
பிரதோஷம். மாலையில் ஸ்ரீசிவபெருமானை தரிசிப்பதால், அனைத்து பாபங்களும் நீங்கும்.
ஆவணி 5 - (21-8-2025):
மாத சிவராத்திரி. இன்று உபவாசம் இருந்து, ஸ்ரீபார்வதி, பரமேசுவரி திவ்ய தம்பதியரை பூஜிப்பது மகத்தான புண்ணிய பலனையளிக்கும்.
ஆவணி 6 - (22-8-2025):
சர்வ அமாவாசை. இன்று நமது பித்ருக்களை (மறைந்த முன்னோர்களை) தர்ப்பணம் மூலம் பூஜிப்பது, குடும்பம் விருத்தியடையும். பாபங்கள் விலகிடும்.
ஆவணி 9 - (25-8-2025) :
செவ்வாய் ஜெயந்தி!
நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய் பகவானுக்கு, சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செந்தாமரை அல்லது செவ்வரளி மலர் கொண்டு மாலையணிவித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொன்னால், ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமாகவோ பலம் குறைந்தோ காணப்பட்டால் அக்குறை உள்பட அனைத்து செவ்வாய் தோஷங்களும் நீங்கும்.
தரணீ கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்பரம்
குமாரம் சக்தி ஹஸ்தாம்ச, மங்களம் ப்ரணாமாம்யஹம்
மேலும், இன்று கல்கி அவதார தினம்.
ஆவணி 10 - (26-8-2025) :
சாம உபாகர்மா - சாம வேதத்தினர் பூஜை செய்ய வேண்டிய புண்ணிய தினம்.
மேலும், இன்று ஹரிதாளிகா கௌரி விரதம். பெண்கள் நித்திய சுமங்கலிகளாகவும், நோய் - நொடிகளற்ற சுகமான வாழ்வும், அம்பாளே உங்கள் உயிருக்கு உத்தரவாதமும் தரக்கூடிய விரதம்.
ஆவணி 11 - (27-8-2025) :
ஸ்ரீவிநாயக சதுர்த்தி. ஸ்ரீவிநாயகப் பெருமானைப் பூஜிப்பதால், வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
ஆவணி 12 - (28-8-2025) : 1. ரிஷி பஞ்சமி.
நமது வேதகால மகரிஷிகளைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.
மகாலட்சுமி விரதம். ஸ்ரீமகாலட்சுமியைப் பூஜிப்பதால், குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை நீங்கிடும்.
ஆவணி 13 - (29-8-2025) :
சஷ்டி விரதம். இன்று உபவாசமிருந்து, ஸ்ரீமுருகப் பெருமானைப் பூஜிப்பது, அனைத்து பாபங்களையும் போக்கியருளும். மேலும்,
இன்று ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம். இன்றைய தினத்தில் வெல்லம், சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி கலந்த பானகம் நைவேத்தியம் செய்து, அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று பக்தர்களுக்கு பானகம் விநியோகம் செய்வது மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது.
ஆவணி 16 - (1-9-2025):
“அதுக்க நவமி விரதம்” - எதிரிகளால் ஏவப்பட்ட அனைத்துவித அஸ்திரங்களும், அவர்களையே திருப்பித் தாக்கும் வண்ணமாகச் செய்திடும் வல்லமை பொறுந்தியது, இவ்விரதம்.
ஆவணி 17 - (2-9-2025):
ஆவணி மூலம். மேலும் இன்று கஜலட்சுமி விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் மேலும் அரசாங்கம் பலவகையிலும் உங்களுக்கு உதவ முன்வருவர்
ஆவணி 18 - (3-9-2025):
ஏகாதசி. இன்று உபவாசமிருப்பது, உடலாலும், உள்ளத்தினாலும், செய்துள்ள அனைத்து பாபங்களையும் போக்கிவிடும்.
ஆவணி19 - (4-9-2025) :
இன்றயை தினம் குரு பகவானின் ஜெயந்தி!
இந்தப் புண்ணிய தினத்தில், குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரங்களை சாற்றி, நாட்டுப் பசு நெய் கொண்டு, 9 மண் அகல் விளக்குகள் ஏற்றி, மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால், ஜனன ஜாதகத்தில் உண்டாகிய குரு தோஷம் அடியோடு விலகிவிடும், குருபலம் உண்டாகும்.
“தேவானாம்ஸ, ரிஷீணாம்ஸகுரும் காஞ்சன ஸன்னிபம்
புத்திபூதம் த்ரிலோகேஸம் தம் நமாமிப்ருஹஸ்பதிம்”
மேலும் இன்று, ஸ்ரீபுவனேஸ்வரி ஜெயந்தி!
ஜோதிடத்தில் மாத்ருகாரகராகப் போற்றப்படும் சந்திரனின் தோஷங்களனைத்தையும் ஒருங்கே போக்கவல்லது.
இன்று வாமன அவதாரம்!
ஆவணி 20 - (5-9-2025) :
ஓணம் பண்டிகை. சிரவண விரதம் - பிரதோஷம்.
ஆவணி 21 - (6-9-2025) :
ஸ்ரீநடராஜர் அபிஷேகம். இன்றைய தினத்தில், கோயிலுக்குச் சென்று, அபிஷேத்திற்குரிய தேன், பால், கரும்புப் பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிருதத்திற்கான பழவகைகளை - தங்களால் இயன்றதைக் கொடுத்தால், உங்கள் வாழ்க்கையும் சந்தனத்தைப் போல் மணக்கும்
மேலும், இன்று அநந்தவிரதம். பள்ளி கொண்ட பெருமானை துளசி தளம் கொண்டு அர்ச்சித்தலும், கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும் மிகச் சிறந்த புண்ணிய பலன்களைக் கொடுக்கவல்லது.
மேலும், இன்றைய தினம் வளர்பிறை சதுர்த்தி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அவதரித்த திதி. இன்றைய தினத்தில்,ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஸ்வாமி திருவுருவப் படத்தை எழுந்தருளி செய்து, பானகம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீநரசிம்ம ஸ்துதியைச் சொன்னால் போதும். சகல ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையும்.
ஆவணி 22 - (7-9-2025) :
சந்திர கிரகணம். மேலும் இன்று இரட்டிப்பு புண்ணிய பலனைத் தரவல்ல உமா மகேஸ்வர விரதம்
மணமாலைக்காகக் காத்துள்ள கன்னியருக்கு, மனத்திற்கேற்ற மணாளன் அமைவார்! மணமான பெண்மணிகள், தங்கள் கணவருடன் அந்நியோன்யத்துடனும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், மனமொத்த தம்பதியினராய், வாழ்வாங்கு வாழ்ந்து, அனைத்து தம்பதியினருக்கும் ஓர் முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டுவர்.
ஆவணி 23 - (8-9-2025) :
மஹாளய பட்சம் ஆரம்பம்.
ஆவணி 25 - (10-9-2025) :
சங்கடஹர சதுர்த்தி. இன்று விநாயகப் பெருமானைப் பூஜிப்பதன் மூலம் தடங்கல்கள் விலகும்.
சித்த மகா புருஷர் சுந்தரானந்தரின் அவதாரப் புண்ணிய தினம்.
இன்றைய தினத்தில், மனத்தளவில் அம்மகானை நினைத்து, உங்கள் வீட்டுப் பூஜையறையில் ஒரு நெய் தீபமேற்றி பக்தி-சிரத்தையுடன் வணங்கினால் போதும், உங்களையும், உங்கள் சந்ததியினரையும் ஒரு கவசம் போல் நின்று, காத்தருள்புரிவார்.
ஆவணி 27 - (12-9-2025) :
மஹாபரணி.
ஆவணி 29 - (14-9-2025) :
சட்டநாத முனி சித்த மகா புருஷரின் அவதாரப் புண்ணிய தினம்.
அம்மகா சித்த புருஷரை மனத்தளவில் தியானித்து, ஏழைகளுக்கு தயிரன்னம் வழங்கினால், உங்கள் இடர்களைக் களைவார். உங்கள் அபிலாஷைகள் அனைத்தையும் ஈடேற்றித் தருவார்.
ஆவணி 30 - (15-9-2025) :
மகாவியதீபாதம்.
இன்று, மறைந்த நம் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் திதி பூஜை ஆகியவற்ைற அளித்து, வணங்குவது, குடும்பத்தில் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும், குறைவற்ற செல்வத்தையும் அளிக்கும். குலம், குடும்பம் விருத்தியடையும்.
ஆவணி 31 - (16-9-2025) :
சுக்ரஜெயந்தி!
இன்றைய தினத்தில் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று, சுக்கிர பகவானுக்கு, மல்லிகை, முல்ைல, வெண் இருவாட்சி, வெண்தாமரை இவற்றில் எவை கிடைக்கிறதோ அவற்றைக் கொண்டு அர்ச்சித்து, மூன்று அல்லது ஆறு, ஒன்பது மண் அகல் விளக்குகளில் நாட்டு மாட்டு பசு நெய் கொண்டு நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஒன்பது முறை சொல்லி, வணங்கக் கடுமையான சுக்கிர தோஷம் தீயினிற் தூசாகும்; நோய் நொடியற்ற நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், சுகம், சத் புத்திரர்கள் அடைவது, உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகிட, குழந்தைகளின் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கிட இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் சொல்லி வர வேண்டும்.
ஹிமகுந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம்குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.
சூரிய கிரகணம்
விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22-ந் தேதிக்கு சரியான ஆங்கிலத் தேதி 7-9-2025, ஞாயிற்றுக்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), பௌர்ணமி திதி, சதயம் நட்சத்திரம், கும்ப இராசியில், மேஷ இலக்னத்தில், இராகு கிரஸ்த பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரகணம் ஆரம்பம் : இரவு மணி 9.51
கிரகணம் மத்தியமம் : இரவு மணி 11.42
கிரகணம் முடிவு : இரவு மணி 2.25
அன்று மதியம் 01.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்.
மஹாளய பட்சம் எனும்
15 மகத்தான புண்ணிய தினங்கள்!
ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் 15 நாட்கள், பக்தியுடன் மறைந்த நம்முன்னோர்களை "மஹாளய பட்சத்தில், பூஜிக்க வேண்டும்
இந்தப் பதினைந்து நாட்களும், எமதர்ம ராஜரின் அனுமதி பெற்று, சூரிய பகவானின் கிரணங்களின் மூலம், நம் பித்ருக்கள் தங்கம் விமானங்களில் நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி நம்முடன் தங்கி, நமது பூஜைகள் அனைத்தையும் ஏற்று, மஹாளய அமாவாசை தினத்தன்று, பித்ரு உலகங்களுக்குத் திரும்பிச் செல்வதாக புராணங்களும் இதிகாசங்களும், சூட்சும கிரந்தங்களும் விவரித்துள்ளன.