குலதெய்வம் தெரியவில்லையா?

By சரவணன்

குலதெய்வம் என்பது குலத்தை காக்கும் தெய்வம் என பொருள் 
என்னதான்  சிவன்=விஷ்ணு=பெருமாள் =அம்மன் =வினாயகர்=முருகன்......
மற்றுமுள்ள  தெய்வங்களை வழிபட்டாலும் 
கிடைக்கூடிய சலுகைகள் குலதெய்வம் மூலமாக மட்டுமே பெற முடியும் என்பது நிதர்சனம் 
குலதெய்வம் தெரியாதவர்கள் அதனால் வரக்கூடிய அனுகூலங்களை பெற முடியாதவர்களாகிறார்கள்.
 
கஷ்டங்கள் துயரங்கள் துக்கங்கள் இழப்புகளை சந்திக்கிறார்கள் அதுவும் ஜாதக ரீதியாக மோசமான தசாபுத்தி காலங்களில் அதிகமாக அனுபவிக்கிறார்கள்.
 
இதிலிருந்து மீண்டுவர குலதெய்வ வழிபாடும் அருளும் ஒன்றே சிறந்த வழிமுறையாகும் 
இன்றுள்ள கால கட்டங்களில் குறிசொல்பவர்களிடமும் ஒருசில போலி ஜோதிடர்களிடம் சிக்கிவிடுகிறார்கள் பிரசன்னம் போட்டு சொல்கிறேன் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என கணிசமான பணத்தை கறந்து விடுகிறார்கள்.
 
ஏதாவது ஒரு தெயவத்தை காட்டி விடுகிறார்கள் நாமும் இதுதான் உண்மையான குலதெய்வம் என எண்ணி வழிமுறைகளை செய்து வருவோம் இது மிக தவறான செயலாகும்.
 
எனது ஆய்வில் பலருக்கும் குலதெய்வம் தெரிவதற்கான வழிமுறையை சிலவுகள் இன்றி எளிமையாக சொல்லி கொடுத்து அதனை பின்பற்றி பலரும் தெரிந்திருக்கிறார்கள் .

அதன் விரிவாக்கம் இதோ
குலதெய்வத்துக்கு உகந்தநாள் என்பது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளாகும் 
திங்கட்கிழமையில் வீட்டை சுத்தம் செய்து 
இலுப்பை எண்ணை 100மில்லி
நல்லெண்ணை 100
பசுநெய் 100
மூன்று எண்ணைகளையும் ஒன்றாக கலந்து 
50மில்லி அகல்விளக்கு ஒன்றை வாங்கி தாமரைதண்டு திரி ஒன்று பஞ்சுதிரி இண்டு என மூன்று திரிகளையும் ஒன்றாக திரித்து 
செவ்வாய் கிழமையில்  அதிகாலை வேளையில் 4:30 முதல் 5:30க்குள் மஞ்சள் பிளையார் பிடித்து அதனை குலதெய்வமாக கருதி அதன் முன்பு மனதார 

"ஓம் ஸ்ரீம் குலதெய்வாய நமஹ: "
எனும் மந்திரத்தை 48 நாட்கள் செய்துவர குலதெய்வம் கண்டிப்பாக தெரிந்துவிடும் 
விளக்கு இரண்டு மணிநேரம் எரிய வேண்டும் 
(நமது கர்ம வினைகளுக்கேற்ப தெய்வம் தெரிவதும் தெரியாததும் )
பெண்கள் மட்டுமே இந்த மந்திரத்தை செய்ய வேண்டும்.

தீட்டு நாட்களில் பூஜையை தவிற்கவும் 
48 தினங்கள் என்பது அதிகமான நாட்கள் ஆனாலும் பரவாயில்லை 
48 முறை செய்து முடிக்க வேண்டும்.
 
பூஜை தவம் போன்று இருக்க வேண்டும் வெறும் 10 நிமிடங்கள் மட்டும் நேரத்தை ஒதிக்கினால் போதும் 
அசைவ உணவு உண்பவர்கள் வீட்டை துடைத்து சுத்தம் செய்த பிறகு தொடரலாம்.
 
பலரும் பயனடைந்த வழிபாட்டு முறையை பயன்படுத்தி குலதெய்வத்தை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

நல்லதே சொல்வோம் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE