நாம் இராகு காலம் குறித்து அறிந்திருப்போம். அந்த காலகட்டத்தில் சுபச் செயல்களை செய்வதையும் தவிர்த்திருப்போம்.
ஆனால் இராகு பகவான் அவருடைய காலகட்டத்தில் இறுதி இருபது நிமிடத்தில் அமிர்த இராகுவாக இருந்து அருள்பாலித்து சுப பலன்களை அள்ளி அள்ளி வழங்குவார்.
இந்தத் தருணத்தை நீங்கள் வேலை வாய்ப்பிற்காக பயன்படுத்திக் கொண்டால்... உங்களுக்கு வேலை கிடைக்கும். அந்த வேலையின் மூலமாக உங்களின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு முன்னேற்றமும் கிடைக்கும்.
அதாவது இராகு காலத்தில் இறுதி இருபது நிமிடத்தில் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இதனைத் தொடர்ந்தால் இராகு பகவான் அமிர்த இராகுவாக அருள் பாலிப்பார்.
அதேபோல் இராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாட்களில் வரும் இராகு காலத்தில் இறுதி இருபது நிமிடத்தில் தம்பதியர்கள் இல்லறத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பாக்கியம் கிட்டும்.
பொதுவாக பகல் பொழுதுகளில் வரும் இராகு காலத்தை 'அயன இராகு' என்றும், இரவு பொழுதுகளில் வரும் இராகு காலத்தை 'சயன இராகு' என்றும் வகைப்படுத்துவார்கள்.
இதில் சயன இராகு என்பது விட இராகு என்றும், இவை அசுப பலன்களை வழங்குவதால்.. இவற்றை கவனமாக தவிர்க்க வேண்டும்.
பகல் பொழுதில் வரும் இராகு காலத்தில் இறுதி இருபது நிமிடத்தில் இராகு பகவான் அமிர்த இராகுவாக மாறி சுப பலன்களை அள்ளி வழங்குவார்.
இந்த சூட்சமத்தை பயன்படுத்தி இராகு பகவானை தொழுது பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதே எம்முடைய முன்னோர்களின் சூட்சமமான குறிப்பு.
இதனை பயன்படுத்தி வாழ்க்கையில் வேலை வாய்ப்பினை பெற்று முன்னேறியவர்களும் உண்டு. குழந்தை பாக்கியத்தை பெற்று மகிழ்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
எனவே நீங்களும் சுப பலன்களை அள்ளி அள்ளி வழங்கும் அமிர்த இராகுவை வணங்கி , அவரின் அருளைப் பெறுங்கள்.