கோவிலுக்குள் சாமியை ஏன் சுற்றி வருகிறோம்?

By சரவணன்

கோவிலுக்கு போனா சாமியை ஏன் சுத்திக் கும்பிடுறோம்னு என் நண்பர் கேட்டார். அப்போ எனக்கு உடனே தோணுனது இது தான். 

நீ இங்கே வாயேன், இப்படியே நில்லுன்னு , அவரை ஒரு சுத்து சுத்தினேன்.. அவனுக்கு சிரிப்பு அடக்க முடியலை.. என்னடா? எப்படி பீல் பண்றேன்னு கேட்டேன்.. இப்போ தெரியுதா.. நான் உன்னை சுத்துறப்போ , நீ வேற எல்லாத்தையும் விட்டுட்டு , எந்த நினைப்பும் இல்லாம என்னை மட்டும் தானே பார்த்தே... 

அந்த மாதிரி, அந்த இறைவனோட கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சி, அவரை வலம் வருவது. அவர் நம்மளை பார்த்தாப் போதுமே, அடுத்து நாம பேசுறது எல்லாம் அவருக்கு கேட்கும். நமக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும்... இல்லையா? 
நாம் இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை கும்பிடலாம், தவறில்லை. கோவிலுக்கு போகணுமா அவசியம்? 

கதிர்களை ஈர்த்து , கும்பம் வழியாக கருவறை சேர்த்து , நீங்கள் மூலவரை வணங்கும்போது உங்கள் நாடி சக்கரங்களின் சுழற்சியை சரி செய்ய ஆலயங்கள் நம் முன்னோர்கள் அளித்த பெரிய வரப் பிரசாதம்.. 

உங்க வீட்டுக்கு பால்காரர் பால் கொண்டு வர்றாருன்னு வைச்சுப்போம். அவர் வர்ற நேரத்தில தான் வருவாரு. எனக்கு உடனே வேணும் கொஞ்சம் அவசரம் ... ஐயா, வீட்டுல திடீர்னு கொஞ்சம் விருந்தாளிக வந்துட்டாக, பால் காரர் கம்மியாத் தான் தருவாரு, வழக்கம்போல தான் எடுத்து வருவாரு... என்ன பண்றோம்..? உடனே ஓடுறோம்ல பால் பூத்துக்கு இல்லை பால் பண்ணைக்கு.

அந்த மாதிரி , நமக்கு சில விஷயங்கள் சீக்கிரம் வேணும்னா, நாம கோவில்களுக்கு போய் தான் ஆகணும்.. உங்களோட மன பாரம் இறங்க , மன நிம்மதி கிடைக்க ஆலயங்கள் , நமக்கு கிடைத்து இருக்கும் அருட் கொடைகள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE