ராசிக்கு 5-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ஆறாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் எடுத்த காரியம் வெற்றியை தேடி தரும் கூட்டுத் தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை அதிகரிக்க செய்யும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
ஆகஸ்ட் 21ம் தேதிவரை சுக்கிரன் 5-ம் இடத்தில் நன்மைகளை தருவார் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
புதிய வாகனம் வாங்கும் யோகமும்.
சிலருக்கு புதுவீடு கட்டும் அமைப்பும் உருவாகும்.
உளவினர்கள் உதவிகள் கிடைக்கும்.
ஆகஸ்ட் 17-ம் தேதி வரை சூரியனும் 6-ம் இடத்தில் பலம் பெறுவதால் அரசியல் செசல்வாக்கு கூடும்.
புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்.
ராசிக்குள் ராகுவும் 7-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும்
சொந்த பந்தங்கள் உதவிநாடி வருவார்கள் .அலைச்சல் வேலை பளூ காரணமாக உடல் அசௌகரியங்கள் உண்டாகும்.
மறைமுக எதிர்புகள் உண்டாகும் கவனம்.
ஏழரை சனியால் இரண்டாம் இடத்து சனிபகவான் சஞ்சாரம் தனவிரையங்களும் கடன் வாங்கும் சூழல்களும் உருவாகும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள்
8-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடாதீர்கள்.
சகோதர சகோதரிகளிடமும் தாய் தந்தையிடமும் தேவையில்லாத கோபங்களை காட்ட வேண்டாம்
விட்டு கொடுத்து போவதால் நன்மைகள் நடக்கும்.
ஆகஸ்ட் 25,26,27 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனுக்கு அர்சனைகளும் வழிபாடும் செய்து வாருங்கள் சனிபகவானுக்கு கருங்குவளை பூக்களால் வழிபாடு செய்து வரவும். நல்லதே நடக்கும்.