சனிபகவான் மட்டும் ராசிக்கு 3,ம் இடத்தில் நன்மைகளை வழங்குவார் ராசிக்கு 3-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் வளத்தை பெருக்குவார்
ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மருத்துவ விரைய செலவுகளுக்கு முடிவு கிடைக்கும்.
வழக்குகள் வாபஸ் ஆகும்.
தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் வெற்றிபெறுவீர்கள்.
6-ம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் சேமிப்புகள் கரையும்.
பண விவகாரங்களில் கவனம் தேவை யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.
இரணடாம் இடத்தில் ராகுவும் 8-ம் இடத்தில் கேதுவும் வலம் வருவதால் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உணடாகும் உணவு விஷயத்தில் எச்சரிக்கை அவசியம் வயிறு சம்பந்தபட்ட பிரச்சனை வரக்கூடும் கவனம்.
இம்மாதம் சூரியன் 7.மற்றும் 8-ம் இடங்களில் பலவீனப்படுவதால்
தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும் யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
7,ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவும் கணக்கு வழக்குகளை சரிபார்க்கவும்.
பங்குசந்தை முதலீடுகளில் கவனம் தேவை பண முதலீடுகளில் மிகுந்த கவனம் செலுத்தவும்.
இம்மாதம் சுக்கிரனும் 6 -7 ம் இடங்களில் பலவீனப்படுவாதால் கணவன் மனைக்குள் பனிப்போர் உருவாகும் ஈகோ பார்ப்பார்கள்
பெண்களால் அவப்பெயரும் அபமானங்களும் சந்திக்க நேரும்
பழைய வாகனங்கள் பழுது பார்த்து சரிசெய்வீர்கள்.
9-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் முன் கோபம் அதிக அளவில் காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். சகோதரர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
அவசர முடிவுகள் தவிற்கவும்.
ஆகஸ்ட் 23,24,25 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வரவும் நல்லதே நடக்கும்.