ஆகஸ்ட் மாதம் 2025 - தனுசு ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

10-ம் வீட்டில் செவ்வாய் பலமாக காணப்படுவதால் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் யாவும் கைகூடும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

தொழில் போட்டிகள் குறையும். எதிரிகள் விலகி செல்வார்கள்.
இம்மாதம் புதன் அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிபாராத பண வரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தரும்.மந்தநிலை நீங்கும் பங்குசந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.

வருட கோள்களில் ராகு 3-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும் கௌரவமும் கிடைக்கும் மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள்.வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும் வெளிநாடு வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு சிறப்பான காலமிது.

7-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்தால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணம் குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

4-ம் இடமான அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.

கேது 9-ம் இடத்தில் இருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் இருக்கும்.

வேலை மற்றும் வியாபார விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடுகளில் தங்கும் சூழல் உருவாகும்.

இம்மாதம் சூரியன் 8-மற்றும் 9-ம் இடங்களில் பலவீனப்படுவதால்.
அரசாங்க பகைகள் வரக்கூடும்.
தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

சுக்கிரன் பலவீனமாக காணப்படுவதால் பெண்களால் அவப்பெயர் உண்டாகும் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலைதூக்கும் வண்டி வாகனங்கள் செலவு வைக்கும் .

ஆகஸ்ட் 21,22.சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வாருங்கள் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குங்கள் நல்லதே நடக்கும்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE