ஆகஸ்ட் மாதம் 2025 - விருச்சிகம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

சுக்கிரன் 8-மற்றும் 9-ம் இடங்களில் பலமாக காணப்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் காணப்படும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்படையும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.

இம்மாதம் செவ்வாய் பலம்பெற்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செவ்வாய் வீரத்துக்கு அதிபதியாக செயல்படுவதால் எதையும் துணிச்சலுடன் எதிர்கொளவீர்கள்.
 
காரிய தடைகள் விலகும் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் மூத்த சகோதரர்களின் உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் விளையாட்டு போட்டிகளில் பட்டங்களும் பதக்கங்களும் கிடைக்கும்.

இம்மாதம் 17-ம் தேதிவரை சூரியன் 9-ம் இடத்தில் பலவீனமாக தென்பட்டாலும் 17-ம் தேதிக்கு பிறகு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு நீங்குவதால் 
புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் அரசியல் செலவாக்கு கூடும்.

வருட கோள்களில் கேது 10-ம் ஸ்தானத்தில் பலம்பெற்றிருப்பதால் தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் தொல்லை இருக்காது.
 
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் பண விரையங்கள் வீண் செலவுகள் உண்டாகும் ஆடம்ப செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

4-ம் இடத்தில் ராகு இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள் வீடு மனை சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.

5-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சாரம் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை மூன்றாம் நபர்களால் குடும்பத்தில் கலகம் உண்டாகும் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

இம்மாதம் புதன் 9-ம் இடத்தில் பலவீனப்படுவதால் சோம்பல் அதிகரிக்கும் சுறுசுறுபின்மை மந்தநிலை காணப்படும் பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.பங்குசந்தை முதலீடுகள் நஷ்டத்தை உண்டுபண்ணும். 

ஆகஸ்ட் 19,20 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனையும் 
இம்மாதம் வரக்கூடிய அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குடும்பத்துடன் குலதெய்வ கோவிக்கு சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE