ஆகஸ்ட் மாதம் 2025 - துலாம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

சூரியன் 10,மற்றும் 11-ம் இடங்களில் பலமாக சஞ்சரிப்பதால்  புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள் சோர்வு நீங்கும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
அரசியல் செல்வாக்கு கூடும் பதவிகள் தேடி வரும்.

நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள் வழக்குகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்பை தரும். சனிபகவான் ராசிக்கு 6- ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில் வளம் பெருகும் புதிய முதலீடுகளால் லாபம் பன்மடங்கு பெருகும்.
சொத்து பிரச்சனைகள் தீரும்.

பங்காளிகளுக்குள் இருந்துவந்த பகைகள் மறையும்.  9-ல் குரு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்
குழந்தை பேறு தடைபட்ட தம்பதிளுக்கு மழலைச்செல்வம் கிடைக்கும்.கணவன் மனைவி உறவு பலப்படும்.

11-ம் இடத்தில் கேது இருப்பதால்  ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள முடியும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்புகளும் உருவாகும்.

இம்மாதம் புதனும் 10-ம் இடத்தில் பலத்துடன் காணப்படுவதால் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து விடுவீர்கள் 
பங்குசந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.

இம்மாதம் 21-ம் தேதிவரை  சுக்கிரன் 9-ம் வீட்டில் பலப்படுவதால் பெண்களால் ஆதாயம் உண்டாகும் பழைய வண்டி வாகனங்கள் பழுது பார்க்க நேரும்.புதிய வாகன யோகமும் உண்டு.உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

12-ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால்  முன் கோபத்தை தவிற்க்கவும் தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
5-ம் இடத்தில் ராகு இருப்பதால் தன விரையங்கள் உண்டாகும் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள்.

ஆகஸ்ட் 19,20 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக அங்காரகன்  (செவ்வாய்) வழிபாடும் முருக பெருமானுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் 
நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE