ஆகஸ்ட் மாதம் 2025 - கன்னி ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

புதன் பலம் பெற்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும் வியாபார யுக்திகளை கையாண்டு லாபம் பன்மடங்கு உயர்த்துவீர்கள் கூட்டுத்தொழில் லாபகரமாக அமையும் பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் ஆன்லைன் வியாபாரம் களைகட்டும் நல்ல லாபத்தை தரும்.

6-ம் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் அன்னிய மொழிகாரர்களின் உதவிகள் கிட்டும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் திடீர் எதிர்பாராத பணவரவுகளால் பண தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ஆகஸ்ட் 17ம் தேதிவரை சூரியன் 11ம் இடத்தில் பலமாக சஞ்சரிப்பார். அரசாங்க உதவிகள் கிடைக்கும்.

அரசியல்  செல்வாக்கு கூடும். புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்.

21ம் தேதிவரை சுக்கிரன் 10-ம் இடத்தில் பலவீனப்படுவதால் குடும்பத்தில் அமைதி கெடும் கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் உருவாகும். வேலையில் திருப்தி இருக்காது.

பணிச்சுமை அதிகமாக காணப்படும்.பெண்களால் அவப்பெயர் உண்டாகும் கவனம். 7-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளுக்கள் விரிசல் விழும் 
எதிர்பார்ப்புகள் பொய்த்து விடும்.

யாரையும் முழுமையாக நம்பிவிடாதீர்கள்.  12-ம் இடத்தில் கேது இருப்பதால் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் கோயில் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
10-ம் வீடடில் குருபகவான் சஞ்சரிப்பதால் தொழில் விரிவாக்கம் எதுவும் செய்ர வேண்டாம். வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.

ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும் கடன் வாங்கும் சூழல் ஏற்படும் கவனம். ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபம் அவசர முடிவுகள் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போகவும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் மனம்விட்டு பேசுங்கள் மன பாரங்கள் குறையும்.

ஆகஸ்ட் 15,16 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் நரசிம்மர் வழிபாடு செய்து வாருங்கள் 
புகழ்பெற்ற நரசிம்மர் ஆலய தரிசனம் சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE