செவ்வாய் 3-ம் இடத்தில் பலமாக சஞ்சரிப்பதால் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும். தணிச்சலாக எதையும் எதிர்கொள்வீர்கள். வேகம் விவேகம் பிறக்கும் .
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள்.சகோதர சகோதரிகளிடம் நல் இணக்கம் உண்டாகும் அவர்களின் உதவிகளுக்கும் கிடைக்கும்.
சுக்கிரன் 12- மற்றும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும் பண தேவைகள் பூர்த்தியாகும்.புதிய வாகன யோகம் உண்டாகும் எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும் தேவைகள் நிறைவடையும்.
இம்மாதம் சுக்கிரன் செவ்வாயை தவிர மற்ற எந்த கோள்களும் உங்கள் ராசிக்கு சாதகமாக இல்லை.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண தன விரையங்கள் உண்டாகும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று.
அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் 2-ம் வீட்டில் கேதுவும் இருப்பதால் மனதில் ஒருவித பயமும் பாரமும் உண்டாகும் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்.
உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள் அடிக்கடி உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும்.
9-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தந்தை மகன் உறவுக்குள் பூசல்கள் விழும்
வீண் விவதங்களால் மன ஸ்தாபங்கள் வரக்கூடும்.
பூர்வீக சொத்து பிரச்சனைகள் இருக்கும். இம்மாதம் புதனும் பலவீனமாக தென்படுவதால் ஞாபக மறதி அதிக அளவில் இருக்கும் பங்குசந்தை முதலீடுகளில் கவனம் தேவை அதிக முதலீடுகள் நஷ்டத்தை உண்டாக்கும். இம்மாதம் சூரியன் 1-மற்றும் 2-ம் இடத்தில் பலமிழக்கிறார்.
அரசாங்க பகை தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். யாரையும் துச்சமாக நினைத்து விடாதீர்கள் எடுத்தெறிந்து பேசிவிடாதீர்கள்.
ஆகஸ்ட் 10,11,12,சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் நவகிரக சந்திரனுக்கு பாலாபிஷேகம் அர்ச்சனை செய்து வரவும்.
பௌர்ணமி திதியன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பதும் நன்மையை தரும் நல்லதே நடக்கும்.