ராசிக்கு 3-ம் ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் காரிய அனுகூலங்கள் உண்டாகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியைத் தேடித் தரும் ஞாபக சக்தி அதிகமாக காணப்படும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் ஆன்லைன் வியாபாரங்கள் பங்குச்சந்தை ஸ்டாக் மார்கெட் நல்ல லாபத்தை பெற்று தரும்.
ஆகஸ்ட் 17ம் தேதிவரை சூரியன் 3ம் வீட்டில் புதனுடன் சேர்ந்து பயணிப்பதால் சூர்யபுதாத்ய யோகம் உண்டாகும் திடீர் தன வரவுகள் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் பெரிய பதவிகள், பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.
இம்மாதம் சுக்கிரனும் 2-மற்றும் 3-ம் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புதுவீடு கட்டும் யோகமும் உண்டாகும்.
பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வருட கோள்களில் குரு 2 சனிபகவான் 11.ராகு 10-ம் இடங்களில் பலமாக இருப்பதால்
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் .
பங்காளிகளுக்குள் இருந்துவந்த பகை மறையும் வம்பு வழக்குகள் சாதகமான தீர்பு வரும். வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் தந்தை மகன் உறவு பலப்படும். பழைய பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
4- ம் வீட்டில் கேது பலவீனப்படுவதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் தாயாருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.
செவ்வாய் 5-ம் வீட்டில் இருப்பதால் முன்கோபத்தை தவிற்க்கவும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள் தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பான மாதமாகும்.
ஆகஸ்ட் 5,6,7 தேதிகளில் சந்திராஷ்டமம் .
பரிகாரம்.
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள்.
பௌர்ணமி திதியன்று மதுரை மீனாட்சி தரிசனம் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.