மீனம் ஜூலை மாதம் 2025 ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

சுக்கிரன் 3 மற்றும் 4-ம் இடங்களில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் பிறக்கும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்படையும் தனவரவு நன்றாக இருக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் குடும்ப உறவினர்கள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

ஜூலை 28-ம் தேதி வரை செவ்வாய் பலம் பெற்று 6-ம் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் சகோதரர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும் சகோதரர்களின் உதவிகளும் கிடைக்கும்.

கேதுவும் 6-ம் வீட்டில் இருப்பதால் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று வருவீர்கள் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
5-ம் இடத்தில் புதன் சஞ்சரிப்பதால் பண இழப்புகள் உண்டாகும் முன் பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்க்கவும்.

ஜென்ம சனி நடப்பதால் தன்னிசையான முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள் தேவையின்றி கடன்கள் வாங்க வேண்டாம் மன குழப்பங்கள் இருக்கும் சற்று கவனமாக இருக்கவும்.

இம்மாதம் சூரியன் 4 மற்றும் 5-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அலைச்சல் அதிகமாக காணப்படும் உடல் நல குறைபாடுகள் உண்டாகும் அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

4-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

ராசிக்கு 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற விரைய செலவுகள் உண்டாகும் யாரை நம்புவது என மனம் குழப்பம் அடையும் அந்நிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் யாருக்கும் ஜாமின்கள் எழுத்துக்கள் போட்டு விடாதீர்கள்.

ஜூலை 4,5,6 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு அரச்சனை செய்து வரவும் ஐயப்ப ஸ்வாமி வழிபாடும் சிறப்பபைத்தரும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE