புதன் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும் வியாபார யுக்திகளை கையாண்டு தொழில் லாபத்தை பெருக்குவீர்கள்.
இம்மாதம் சுக்கிரனும் 4, மற்றும் 5-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் பிறக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
ராசிக்கு 5-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் குல தெய்வத்தின் ஆசிகளும் அனுகிரகமும் கிடைக்கும்.
மாத பிற்பாதி சூரியன் 6-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார் பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள் அவர்களால் உதவிகளும் ஆதாயமும் கிடைக்கும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
இம்மாதம் செவ்வாய் 7 மற்றும் 8-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அவசர முடிவுகளை தவிர்க்கவும் முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
ராசிக்குள் ராகுவும் 7- இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை தலையை தூக்கும் குடும்ப உறவினர்களுக்குள் வீண் விவாதங்கள் உண்டாகும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் சிக்கல் நீடிக்கும் தேவையின்றி கடன் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம் யாருக்கும் ஜாமீன் எழுத்துக்கள் போட வேண்டாம்.
2-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியம் கெடும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும் முடிந்த அளவு வீட்டு உணவுகளை சாப்பிடவும்.
ஜூலை 2,3,4 சந்திராஷடமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய
சனிக்கிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வரவும் அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குலதெய்வ வழிபாடு நன்மையை தரும் நல்லதே நடக்கும்.