ராசிக்கு 11-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செடி படையும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.பிள்ளைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.
மாதம் முப்பாதி வரை சூரியன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசியல் செல்வாக்கு கூடும் பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும் அவர்களால் ஆதாயமும் உதவிகளும் கிட்டும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் சில மன குழப்பங்கள் உண்டாகும் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் குடும்பத்தாருடன் கலந்த ஆலோசித்து முடிவெடுக்கவும்.
இம்மாதம் புதனும் 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சோம்பல் அதிகமாக காணப்படும் எந்த வேலையாக இருந்தாலும் தள்ளி போடுவீர்கள்.
ஏழாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத விவாதங்கள் தவிர்க்கவும் அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.
அஷ்டமஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம் பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகளும் வரக்கூடும் கவனம்.
இம்மாதம் செவ்வாய் 1 மற்றும் இரண்டாம் இடங்களில் சஞ்சரிப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்து இருந்து பேசாதீர்கள், சகோதர வடிவில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் அவசர முடிவுகள் தவிர்க்கவும்.
ஜூலை 26-ம் தேதி வரை சுக்கிரன் பத்தாம் இடத்தில் பலவீனமாக சஞ்சரிப்பதால் பெண்களால் அவமானங்களும் விரையங்களும் உண்டாகக்கூடும் பழைய வாகனங்கள் தண்ட செலவு வைக்கவும் பழுது பார்க்க நேரும் வாகனங்களில் செல்லும் பொழுது மெதுவாக செல்லுங்கள்.
ஜூலை.16,17,18 சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள நவகிரக சூரியனுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் பிரதோஷ வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.