ராசிக்கு 3-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெற முடியும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.
ஜூலை 28ம் தேதிவரை செவ்வாய் 3-ம் இடத்தில் பலத்துடன் காணப்படுகிறார் இதனால் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடித் தரும்.
தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தொழில் வளம் பெருகும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
இம்மாதம் சுக்கிரனும் 12 மற்றும் ஒன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும் அடிக்கடி விருந்துகளில் கலந்து கொள்வீர்கள் புதிய வாகன வாங்கும் யோகம் உண்டு சிலருக்கு புது வீடு கட்டும் அமைப்பும் உண்டாகும் லோன் எளிதில் கிடைக்கும்.
9-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் உண்டாகும் வீண் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நலம் அந்நிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்துகள் போட வேண்டாம்.
ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிப்பதால் வீண் ஆடம்பர செலவுகளை குறைக்கவும் தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம்.
இம்மாதம் சூரியன் ஒன்று மற்றும் 2-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள் பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
இம்மாதம் புதனும் இரண்டாம் வீட்டில் பலவீனமாக இருப்பதால் மந்த நிலை காணப்படும் பண விவகாரங்கள் மிகுந்த எச்சரிக்கை தேவை ஏமாற்று பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்வீர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்க்கவும்.
ஜூலை 11,12,13 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுநரசிம்மர் அல்லது யோகநரசிம்மர் வழிபாடு செய்து வாருங்கள் புதன்கிழமைகளில் இயலாதவர்களுக்கு உணவளிப்பது நன்மையை தரும்.