ரிஷபம் ஜூலை மாதம் 2025 ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

வருட கோள்களில் மூன்று கோள்கள் உங்கள் ராசிக்கு நற்பலன்களை வழங்கி வருகிறார் அவ்வகையில் சனிபகவானும் ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் விருத்தியும் லாபத்தையும் தருவார் தொழில் போட்டிகள் குறையும் தன விரயங்கள் தவிர்க்கப்படும் வீண் மருத்துவ செலவு கட்டுக்குள் வரும் ராகு பகவான் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

மாத கோள்களில் சுக்கிரன் ஒன்று மற்றும் 2-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் குடும்ப உறவினர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும் வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி உண்டாகும் சிலருக்கு புதிய வீடு கட்டும் யோகமும் உண்டு லோன் எளிதில் கிடைக்கும்.

இம்மாதம் புதனும் 3-ம் இடத்தில் பலத்துடன் சஞ்சரிப்பதால் ஞாபக சக்தி அதிகமாக காணப்படும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் கூட்டுத்தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

மாத பிற்பாதி சூரியன் 2-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு செல்வதால் சூரியனால் ஆதாயம் பெறுவீர்கள் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் வழக்குகள் வாபஸ் ஆகும் உங்களுக்கு சாதகமாக அமையும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

இம்மாதம் செவ்வாய் 4 மற்றும் 5-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் முன் கோபத்தை தவிர்க்கவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும்.

4-ம் வீட்டில் கேது இருப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் தாயாருக்கு அடிக்கடி மருத்துவ விரைவு செலவுகள் உண்டாகும் கவனம்.

ஜூலை 9,10,11 சந்திராஷ்டமம் 

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்து வரவும் தேய்பிறை பைரவர் வழிபாடும் சிறப்பைதரும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE