விளக்கேற்றும் திரிகளின் மகத்துவம்?

By தேஜஸ்

பொதுவாக திரி என்பது பஞ்சு திரி, தாமரை தண்டு திரி, வாழைத்தண்டு திரி, வண்ண துணியிலான திரி, வெள்ளெக்கு பட்டையாலான திரி  என பல வகைகள் உள்ளன.

திருமண சுபமாக நடைபெற வேண்டும் என்றால் பஞ்சு திரியை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பஞ்சு திரியை பயன்படுத்தினால் மங்கலம் உண்டாகும். அதாவது சுப காரியம் தடையின்றி நிறைவேறும். 

கடந்த பிறவியில் செய்த தீவினைகளை இந்த பிறவியில் நீக்குவதற்கு சிவபெருமானை வழிபடும்போது தாமரை தண்டு திரியை பயன்படுத்த  வேண்டும். ஏனெனில் தாமரைத் தண்டு திரி முன் ஜென்ம பாவங்களை நீக்குவதுடன் இந்த பிறவியில் நீங்கள் அனுபவிப்பதற்கான செல்வ வளத்தை அருளும் ஆற்றலை பெற்று இருக்கிறது.

குலதெய்வ வழிபாடு செய்யா விட்டால்  தெய்வ குற்றம் உண்டாகும். இது போன்ற தெய்வ குற்றம் ஏற்பட்டு அதனை நீக்க வேண்டும் என்றால்  வாழைத்தண்டு திரியை பயன்படுத்த வேண்டும். இந்த திரியை பயன்படுத்தி நீங்கள் பிரார்த்திக்கும் போது உங்களுடைய தெய்வக் குற்றம் நீங்கி குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

நிதி உதவி வேண்டுமென்றால் இறைவனை வணங்கும்போது ஏற்றும் தீபத்தில் வெள்ளெருக்கு பட்டையிலான திரியை பயன்படுத்த வேண்டும்.  இதன் காரணமாக நீங்கள் நினைத்த அளவிற்கு பண உதவி கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

அம்பாளை வழிபடும்போது உங்களுக்கான பரிபூரண பலன் கிடைக்க வேண்டும் என்றால் மஞ்சள் வண்ண துணியினால் உருவாக்கப்பட்ட திரியை தீபத்தில் ஏற்றி வழிபட வேண்டும். இந்தத் திரி அம்பாளின் அருளை முழுமையாக பெற்றுத்தரும். 

திருமணத்தடையை நீக்குவதற்காக நீங்கள் தீபமேற்றும் போது சிவப்பு வண்ண துணியினால் உருவாக்கப்பட்ட திரியை பயன்படுத்த வேண்டும் . இது உங்களுக்கு திருமண தடையை அகற்றி சுப பலனை வழங்கும் ஆற்றலை பெற்றது. 
அதே சமயத்தில் திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியத்தில் ஏதேனும் தடை இருந்தாலும் அதனையும் நீக்கும் வல்லமை பெற்றது இந்த சிவப்பு வண்ண துணியினாலான திரி. 

இந்த சிவப்பு வண்ண துணியிலான திரியை ஏற்றி நீங்கள் வழிபடும் போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய உடல் ரீதியான தடையை குறிப்பாக மலட்டுத்தன்மையை அகற்றி புத்திரபாக்கியத்திற்கு வழிவகுக்கும். 

இது மட்டுமல்லாமல் செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பை எளிதில் நீக்குவதற்காக ஏற்றும் தீபத்தில்  இந்த சிவப்பு வண்ண துணியிலான திரியை பயன்படுத்தினால் பலன் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபிட்சம் நிலவ வேண்டும்; அனைவரும் மகிழ்ச்சியாகவும், மன மகிழ்ச்சியாகவும், செல்வ வளம் குறைவில்லாமல் வாழ வேண்டும் என விரும்பினால் தினமும் உங்களுடைய பூஜை அறையில் நீங்கள் விளக்கேற்றும் போது வெண்மை வண்ணத்திலான துணியிலான திரியை பயன்படுத்த வேண்டும்.

இப்படி ஒவ்வொரு பலன்களுக்கும் தீர்வு காண அதற்குரிய  திரியை பயன்படுத்தி பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE