இன்றைய ராசி பலன்கள் - (03-06-2025 செவ்வாய் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. டென்ஷன் முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பற்றி வெளியில் பேச வேண்டாம். மனச்சுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிற்பது நல்லது இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.

கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனை முற்றிலும் தீரும்.கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். உறவினர்களிடமிருந்து மனதிற்கு இதமான செய்தி வரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். ஞாபக மறதி தொல்லை இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு
தனுசு நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரித்து பேசுவர்

மகரம்
மகர ராசி நேயங்களே, ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளால் சிரமங்கள் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்

மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE