இன்றைய ராசி பலன்கள் - (31-05-2025 சனிக் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்

பிரியமானவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வெளியில் யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்

குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்

குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர்களிடம் மனக்கசப்பு வரும். திட்டமிட்ட வேலைகள் எவ் வித தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்

கடகம்

குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். மனதைரியம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.

சிம்மம்

விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

கன்னி

குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம்

புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிகம்

தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனதில் பணம் சேமிக்கும் எண்ணம் வரும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்

தனுசு

அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். நட்பால் நன்மை உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மகரம்

குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். உறவினர்களின் வருகை அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்பம்

குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும்.கணவன் மனைவிக்குள் பனிப்போர் உண்டாகும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மீனம்

எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE