மகா பெரியவா அவர்கள் அருளிய ருத்திராட்சத்தின் மகிமை

By செய்திப்பிரிவு

வடமொழியில் ருத்ராட்சம் என்பதற்கு ருத்திரனின் கண்கள் என்று பொருள். ருத்ரன் + அட்சம் என்பதே ருத்ராட்சம். இதனை பகவான் சிவனின் கண் என்று சிலரும் பகவான்சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று வேறு சிலரும் சொல்கின்றனர்.

தேவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் ஸம்ஹாரம் செய்த போது, பகவான் சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து பூமியில் விழுந்த நீர்த் துளியிலிருந்து ருத்ராட்சம் தோன்றியது என சிலரும்,

கடும் தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமான் தவம் முடிந்து கண் விழித்த சமயம், கண்களிலிருந்து வழிந்த நீரிலிருந்து தோன்றியது ருத்ராட்சம் எனவும், பகவான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உள்ள கண்மணியே ருத்ராட்சமாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.

மகா பெரியவா அவர்கள் அருளிய ருத்திராட்சத்தின் மகிமை :

‘ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும்.

ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.
அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்றும், சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.
அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும்.

மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்றும்,
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்றும் மகா பெரிவா அருளியுள்ளார்.

நோய்களுக்கு அருமருந்து:
வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய முன்று தோஷங்களை நீக்கவும், விக்கலை நிறுத்தவும், சளியை வெளியேற்றவும் ருத்ராட்சம் பலனளிக்கவல்லது என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார் தேரைச் சித்தர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE