மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே "சந்திரதரிசனம்' என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர்.
சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், "பித்தா பிறைசூடி' என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார்.
மூன்றாம் பிறை உருவான கதை :
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர்.
உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.
இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.
சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.
நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.
நான்காம் பிறையை தான் பார்க்கக்கூடாது. இதற்கு இரண்டு புராண கதைகள் உண்டு. அவற்றை சுருக்கமாக இப்போது பார்ப்போம்.
ஒன்று – சதுர்த்தி அன்று கணபதியின் உருவம், மூஞ்சூறு வாகன பயணம், நடனம் கண்டு ஏளனம் செய்த சந்திரனுக்கு தேயும்படியான சாபம் கிடைத்தது. பின் தவறுக்கு வருந்தி பூஜை விரதம் வழிபாடுகளை கடைபிடித்து சாப விமோசனம் பெற்றார்.
இரண்டு – அபராஜித் என்னும் மன்னன், கேட்டதை எல்லாம் கொடுக்கும் அற்புதமான ஸ்யமந்தகமணி யை வைத்திருந்தான். ஸ்யமந்தகமணி பற்றிய இரகசியம் கண்ணனுக்கு மட்டுமே தெரியும். ஒருநாள் அபராஜித்தின் தம்பி வேட்டையாட காட்டிற்கு சென்றபோது இம்மணியை அணிந்து சென்றான். ஒரு சிங்கத்திடம் அகப்பட்டு மாண்டு போனான். இதை அறியாத அபராஜித், கண்ணனே ஸ்யமந்தகமணிகக்கு ஆசைப்பட்டு தன் தம்பியையையும் கொன்று, மணியையும் களவாடிவிட்டான். என்று பழி சுமத்தினான்.
கண்ணன் மீது சுமத்தப்பட்ட இந்த வீண்பழிக்கு காரணம், அவர் நான்காம் பிறையை கண்டதுதான் என்றும், அதற்குண்டான பரிகாரத்தையும் நாரதமகரிஷி எடுத்துக்கூறினார். நாரதமகரிஷி அறிவுறுத்தியதைபோல. கணபதியை வழிபட்டு, மூன்றாம் பிறையை தரிசிக்க விரதமிருந்து,
அபாராஜித்தின் தம்பியை காடு மலை என்று பலவிடங்களில் தேடிக் கொண்டிருந்த கண்ணனுக்கு கானகத்தில் ஒரு குகையிலிருந்து தெய்வீக ஒளி வருவது கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்க்க, ஜாம்பவான் இருந்தார். ஜாம்பவானின் மகளிடம் அந்த ஸ்யமந்தகமணி இருந்தது. நடந்ததை கண்ணனிடம் கேட்டு அறிந்துகொண்ட ஜாம்பவான், ஒரு சிங்கத்தை கொன்றபோது அதனிடம் இம்மணி இருந்தது என கூறி . மணியை கொடுத்ததோடு, தன் மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
ஸ்யமந்தகமணியை அபராஜித்திடம் கொடுத்து வீண்பழியிலிருந்து மீண்டார். கண்ணன். எனவே நான்காம் பிறையை நாம் பார்க்கக்கூடாது. தெரியாமல் பார்த்துவிட்டால் கணபதி வழிபாடு, அடுத்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விரதம் , மூன்றாம் பிறை தரிசனம், ஸ்யமந்தகமணி புராணம் படித்தல் கேட்டல் சொல்லுதல் இவற்றில் இயன்றதை செய்தால் தோஷம் போகும். கணேசனுடைய, கிருஷ்ணனுடை அருள் கிட்டும்.