செலவே இல்லாத பரிகாரம் தினமும் அத்திமரம் அடியில் அத்திமரம் அடியில் 1மணிநேரம் உட்கார்ந்து அந்த காற்றை சுவாசிக்க குபேர வாழ்க்கை உண்டாகும்.
கடவுள் கொடுத்த வரம் அத்தி மரம்
அத்தி என்பது சுக்கிரன் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சுக்கிரனோடு
பாவிகள் இனையப் பெற்றவர்கள் மற்றும் பாவிகள் பார்வை
பெற்றவர்களுக்கு சுக்ரதோஷம் தீவிரமாக இருக்கும். இதனால் திருமணத்தடை, திருமண தாமதம் மற்றும் சுக்கிரனோடு நெருப்பு கிரகங்கள் சேரும்பொழுது குழந்தை இன்மை ஏற்படும். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், இந்தமாதிரியான சுக்கிர தோஷம் உள்ள அனைவரும் சுக்கிரன் பலம் பெற்ற அத்தி மரம் தலவிருட்ச கோவில்கள் மற்றும் அத்தி மரச்சிலைகள் உள்ள கோவிலுக்குச் சென்று தங்கி நீராடி குளத்தில் குளித்து சுக்கிர அம்சம் பொருந்திய கடவுளைத் தரிசிக்க வேண்டும். சுக்கிரன் என்றவுடன் அத்தியின் அதீத பலத்தைக் குறிக்கும்.
ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி. பூமிக்கு அடியில் நீரூற்று, நீரோடை குறைந்த அடிகளில் இருக்கும் என்ற ஐதீகமும் உண்டு.
மதுரையில் கம்ப ராமாயத்ணதை அரங்கேற்றம் செய்தார்களே, அது இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்தது. சரியானதா, தகுதியானதா, தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும், இல்லையென்றால் மூழ்கிவிடும். இதுபோன்ற தெய்வீகச் சக்தி உடையதும் இந்த அத்தி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனது.
உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
புதுவைக்கு அடுத்த வீராம்பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரத்தை செங்கேணி அம்மன் சிலையாக வடித்து வழிபடுகிறார்கள்.
திருமலையில் (திருப்பதி) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளிஉள்ளார்.
நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம்.
மும்மூர்த்திகளின் ஒரே வடிவமாக பார்க்கப்படும் தத்தாத்ரேயர், அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அத்தி மரத்தை கண்டால் இறுக்க பற்றி கொள்ளுங்கள். உங்கள் விதியை மாற்ற கூடிய சக்தி அத்தி மரத்திற்கு உண்டு.
காஞ்சி அத்திவரதர் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தவர் என்பது நாம் அறிந்ததே..